×
 

வருங்கால துணை முதல்வரே! நிர்வாகியின் பேச்சால் அதிர்ச்சியான நயினார்...

அரியலூரில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தை நயினார் நாகேந்திரனை வருங்கால துணை முதல்வர் என்று பாஜக நிர்வாகி வரவேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். கட்சிப் பணி, பூத் கமிட்டி அமைப்பது, பிரச்சாரம் மேற்கொள்வது, சுற்று பயணம் செய்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலையொட்டி, பாஜகவினரும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டார். அப்போது, வரவேற்புரையாற்றிய பாஜக நிர்வாகி ஒருவர், வருங்கால துணை முதல்வர் நயினார் நாகேந்திரன் என்று கூறினார். அதனைக் கேட்டு அதிர்ச்சியான நயினார் நாகேந்திரன், துணை முதல்வரே என்றெல்லாம் சொல்லக்கூடாது என்று அறிவுறுத்தினார்.

ஏற்கனவே கூட்டணி ஆட்சி தொடர்பான பிரச்சனை வளர்ந்து வரும் நிலையில், துணை முதல்வரே என்று நயினார் நாகேந்திரனை கூறியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் 2026 சட்டமன்ற தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து சந்திக்கின்றன. அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று அனைவரும் அறிந்ததே. கூட்டணி ஆட்சி என்பது கிடையாது. தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என்று அதிமுக கூறிவரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்று அமித் ஷா கூறி வருகிறார்.

இதையும் படிங்க: பொற்கால ஆட்சியா?அசிங்கப்படனும் இப்படி பேச... விளாசிய நயினார்!

அப்படி இருக்கும் நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை வருங்கால துணை முதல்வர் என்று பாஜக நிர்வாகி கூறி இருப்பது சந்தேகத்தை அதிகப்படுத்தி உள்ளது என்று விமர்சித்து வருகின்றனர். ஒருவேளை அதிமுக ஆட்சி அமைத்தால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித் ஷா கூறியது உண்மையாகி விடுமோ என்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜகவினருக்கு ஆட்சியில் பங்கு என்ற நிலை வந்து விடுமோ என விமர்சித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நிச்சயம் ஆட்சி மாறும்.. காட்சிகளும் மாறும்.. நயினார் நாகேந்திரன் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share