ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப்பழி... ரவுடி ஜெயபாலை தட்டி தூக்கிய போலீஸ்...!
ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பராக கூறப்படும் ரவுடி ஒற்றைக்கண் ஜெயபாலை போலீசார் கைது செய்தனர்.
ஆம்ஸ்ட்ராங் 2024 ஜூலை 5 ஆம் சென்னையில் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அரசியல் வட்டாரத்தை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலைக்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. சென்னையின் நிழல் உலகத்தில் மூன்று குழுக்களுக்கு இடையேயான ஆதிக்கப் போட்டியும் ஒரு காரணமாக இருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.
இதுவரை 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் ஜூலை 14 அன்று போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ரவுடி நாகேந்திரன் மரணம் அடைந்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகேந்திரன் உயிரிழந்தார்.
மாரடைப்பு ஏற்பட்டு அவர் மரணமடைந்தார். ஆம்ஸ்ட்ரக் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்கு பழி வாங்க திட்டம் போட்டு இருந்த ரவுடி ஒற்றைக்கண் ஜெயபால் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருமழிசை பகுதியில் பதுங்கி இருந்த ரவுடி ஒற்றைக்கண் ஜெயபாலை போலீசார் கைது செய்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பராக இருந்தவர் ஒற்றைக்கண் ஜெயபால் என்று கூறப்படுகிறது. ஆற்காடு சுரேஷ் கொலை உள்ளிட்ட 13 வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: திருமணத்திற்கு முன் ஆண், பெண் உறவு... நீதிமன்றம் பிறப்பித்த பரபரப்பு தீர்ப்பு...!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பலர் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிவாங்க இவர் திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அஸ்வத்தாமன் உள்ளிட்டோர் ஜாமினில் வெளிவந்துள்ள நிலையில் ஒற்றைக்கண் ஜெயபாலை போலீசார் கைது செய்துள்ளனர். இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி இருந்தவர்களில் 18 பேர் ஜாமினில் வெளிவந்துள்ளனர். அவர்களை பழி தீர்க்க ஒற்றைக்கண் ஜெயபால் திட்டம் தீட்டி இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எந்த தப்பும் இல்லை! இயக்குனர் கஸ்தூரிராஜா விடுதலை சரியே..! சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...!