சுத்தமா நம்பிக்கை இல்ல! ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கு.. ஐகோர்ட் போட்ட தடாலடி உத்தரவு..!
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ க்கு மாற்றக்கோரிய மனுவுக்கு பதில் அளிக்க அரசு, காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆம்ஸ்ட்ராங், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகவும், வழக்கறிஞராகவும் பணியாற்றியவர். சென்னை பெரம்பூரில் புதிதாக கட்டப்படும் அவரது வீட்டருகே 2024 ஜூலை 5 ஆம் தேதி இரவு, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று அவரை வெட்டி கொலை செய்தது.
இந்த கொலை சம்பவம் மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியையும், பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுவரை இந்த வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, அஸ்வத்தாமன் உள்ளிட்டவர்கள் அடங்குவர்.
இதையும் படிங்க: பொன்முடி வழக்கு.. எதன் அடிப்படையில முடிச்சு வச்சீங்க? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி..!
ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, மாநில காவல்துறையின் விசாரணை நியாயமாக நடைபெறவில்லை என்ற குற்றச்சாட்டை மையமாகக் கொண்டது.
பொற்கொடி தனது மனுவில், ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பின்னால் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பினார். மேலும், மாநில காவல்துறையால் இந்த வழக்கை சுதந்திரமாகவும் நியாயமாகவும் விசாரிக்க முடியாது என்று கூறினார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாகக் கருதப்படும் சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டது.
சிபிஐ விசாரணை உத்தரவிட கோரிய பொற்கொடியின் மனுவை ஏற்கக் கூடாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் தொடர்ந்து இதே கோரிக்கையின் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்த நிலையில் பொற்கொடி தாக்கல் செய்த மனுவுக்கு காவல்துறை மற்றும் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது. வரும் இருபதாம் தேதிக்குள் பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: வழக்கறிஞரை கைது செய்தது செல்லாது! உயர்நீதிமன்றம் அதிரடி! காவல்துறைக்கு சிக்கல்!