×
 

அளவில்லாம போச்சு.. வன்முறையை தூண்டும் ரீல்ஸ்! INSTA உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப முடிவு..!

குற்றங்கள் மற்றும் வன்முறைகளை தூண்டும் வகையிலான ரீல்ஸ்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமூக வலைத்தளங்களில், குறிப்பாக இன்ஸ்டாகிராமில், வன்முறை மற்றும் குற்றச்செயல்களைத் தூண்டும் வகையில் ரீல்ஸ் மற்றும் பிற உள்ளடக்கங்கள் பதிவேற்றப்படுவது உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய உள்ளடக்கங்கள் சமூக அமைதியை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளையும், மனநலப் பாதிப்புகளையும் உருவாக்குகின்றன.

இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்களின் தாக்கம், அதற்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள், மற்றும் இதனைத் தடுக்க சமூகத்தின் பொறுப்பு குறித்து ஆராயப்படுகிறது. இன்ஸ்டாகிராமில் வன்முறை உள்ளடக்கங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எடுத்துக்காட்டாக, 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்ஸ்டாகிராமில் வன்முறை தொடர்பான உள்ளடக்கங்கள் 86 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்நிறுவனத்தின் அறிக்கை குறிப்பிடுகிறது. இத்தகைய உள்ளடக்கங்கள் பெரும்பாலும் ரீல்ஸ் வடிவில், உணர்ச்சிகளைத் தூண்டும் மற்றும் மோதல்களை உருவாக்கும் வகையில் பதிவிடப்படுகின்றன. இவை ஜாதி, மதம், இனம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களிடையே பிளவுகளை உருவாக்குவதோடு, சில சமயங்களில் நேரடியாக வன்முறைச் சம்பவங்களுக்கு வழிவகுக்கின்றன. 

இதையும் படிங்க: இனி திருப்பதியில் இதை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் - தேவஸ்தானம் எச்சரிக்கை...!

வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்றவை, தகவல்களை விரைவாகப் பரப்பும் ஆற்றல் கொண்டவை. இதனால், வன்முறையைத் தூண்டும் உள்ளடக்கங்கள் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்களைச் சென்றடைகின்றன. இந்த நிலையில் வன்முறை மற்றும் குற்றங்களை தூண்டும் படங்கள், ரீல்கள் தொடர்பாக instagram உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விரைவில் கடிதம் அனுப்பப்பட உள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதுமலை காப்பகத்தில் 79வது சுதந்திர தின விழா.. தேசியக் கொடிக்கு யானைகள் சல்யூட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share