×
 

இந்தியாவுல ஒரு உயிரை எடுக்க பாக். நூறு முறை யோசிக்கும்.. அசாதுதீன் ஓவைசி உறுதி..!

தீவிரவாத தாக்குதலில் இருந்து அப்பாவி மக்களை காக்க பிரதமர் மோடி உரிய நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் நாளுக்கு நாள் வீரியமெடுத்து வருகிறது. பாகிஸ்தான் மீதான பதிலடி தொடர்ந்து வருகிறது. அப்பாவி மக்களை கொன்று குவித்த சம்பவத்தின் வலியும் வேதனையும் ஆறாத வடுவாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், பகல்காம் தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமின் கட்சி தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஓவைசி பேசினார். அப்போது, பகல்காம் கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதல் மீது அரசாங்கமும் பிரதமரும் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானுடன் போர் அபாயம்..! பிரதமருடன் விமானப்படை தளபதி திடீர் ஆலோசனை..!

இறந்தவர்களுக்கு அவர்கள் நீதியை பெற்றுத் தருவார்கள் என்றும் தோல்வியுற்ற பாகிஸ்தானில் இருந்து நமது நாட்டிற்குள் வந்து அப்பாவிகளைக் கொல்லும் பயங்கரவாதத் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர, பிரதமர் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புவதாகவும் தெரிவித்தார். இந்தியாவிற்கு வந்து ஒருவரைக் கொல்வதற்கு முன்பு பாகிஸ்தான் நூறு முறை யோசிக்கும் நிலையை பிரதமர் உருவாக்குவார் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாகிஸ்தானை அலங்கோலப்படுத்துவோம்... மோடியுடன் கைகோர்த்த அங்கோலா..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share