BJP ஹிந்துத்துவா… காங்கிரஸ் SOFT ஹிந்துத்துவா! அவ்வளவுதான் வித்தியாசம்… தோலுரித்த சீமான்…!
பாஜகவுக்கும் காங்கிரஸ்க்கும் எந்த வித்தியாசமும் இல்லை என சீமான் விமர்சித்துள்ளார்.
பன்னாட்டு தமிழ் கிருத்துவப் பேராயம் மற்றும் சமூகநீதிப் பேரவை நடத்தும் உரையாடல் அமர்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். சென்னை அசோக் நகரில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பங்கேற்று சீமான் உரையாற்றினார். அப்போது, உலகின் எந்த மூளைக்கு சென்றாலும் தமிழன் என்று சொல்வது தான் நம் அடையாளம் என்றார். வரும் சட்டமன்ற தேர்தல் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தனித்து தான் நிற்போம் என்றும் தனித்துவமாக நிற்போம் எனவும் கூறினார்.
பாஜக அல்ல எந்த கட்சி உடனும் நாம் தமிழர் கட்சி கூட்டணி அமைக்காது என்றும் எனக்கு மும்மொழியும் இல்லை, இருமொழியும் இல்லை, ஒரே மொழி தாய் மொழி தான் என தெரிவித்தார். அரசியல் என்பது மக்கள் மீது அதிகாரம் செலுத்துவது அல்ல என்றும் கூறினார். திராவிட கட்சிகளுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்த சீமான், 15 ஆண்டுகளாக எவ்வளவு நெருக்கடியை சந்தித்து இருக்கிறேன்., நெருக்கடியின் போதே கூட்டணி வைத்திருக்க மாட்டேனா என கேள்வி எழுப்பினார்.
எனக்கான உரிமையை நானே மீட்டு எடுப்பேன் என்ற உறுதியோடு நின்ற போது தன்னோடு இளைஞர்கள் வந்து நின்றதாகவும் , அதனால் உருவானது தான் நாம் தமிழர் எனும் புரட்சி படை என்றும் தெரிவித்தார். ஒரு ரூபாய் ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் யார் ஜெயிக்கிறார்கள் என்று பார்க்கலாம் என்றும் புகழ்ச்சியில் வாழ்பவர்களுக்கு தான் துணை தேவைப்படுகிறது., ஆனால் முயற்சியில் வளர்ப்பவனக்கு துணை தேவை இல்லை என்றும் தெரிவித்தார். ஒன்று விதைத்தால் ஓராயிரம், ஈராயிரமாக முளைத்து வரும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: காசா மக்களுக்காக கண்ணீர்... எல்லாத்துக்கும் பதவி சுகம் தான் காரணம்! விளாசிய சீமான்...!
மேலும், காங்கிரசுக்கும் பிஜேபிக்கும் கட்சிக் கொடியில் வண்ணம் மாறுமே தவிர கொள்கை மாறவில்லை என்று சீமான் தெரிவித்தார். பாஜக ஹிந்துத்துவா என்றும் காங்கிரஸ் சாஃப்ட் ஹிந்துத்துவா என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: சாதிப் பெயரை நீக்க சொல்லிட்டு ஜி.டி. நாயுடு பெயரில் சாலை... இதான் திராவிட மாடலா? சீமான் சரமாரி கேள்வி...!