சட்டசபை 2 ஆம் நாள் அமர்வு... மறைந்த முன்னோடிகளுக்கு மரியாதை... ஒருமனதாக தீர்மானங்கள்..!!
சட்டப்பேரவையின் 2 ஆம் நாள் அமர்வு இன்று தொடங்கியது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் அமர்வு இன்று காலை சபாநாயகர் பிரபாகர் தலைமையில் தொடங்கியது. இந்த அமர்வு புதிய அரசின் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளைப் பிரதிபலித்தது.
அப்போது தமிழக அரசின் முன்னெடுப்புகள், தொலைநோக்குப் பார்வைகள் உள்ளிட்டவற்றை ஆளுநர் எடுத்துரைத்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார்.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அரசின் செயல்பாடுகள், எதிர்க்கட்சிகளின் கேள்விகள் மற்றும் முக்கிய தீர்மானங்கள் இந்த நாளில் இடம் பெற்றன. அமர்வு தொடக்கத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அவர்கள் அவையை ஒழுங்குபடுத்தினார். புதிய உறுப்பினர்களின் பங்கேற்பு, முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த இரங்கல் தீர்மானங்கள் அவையில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டு, உறுப்பினர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: "தமிழுக்கே முன்னுரிமை"..! அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அமைச்சர் ராஜ்மோகன்..!!
சட்டப்பேரவையில் இரண்டாம் நாள் அமர்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவுக்கும், இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. சட்டப்பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. ராமசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள் ராமசாமி, வீராசாமி, சுவாமிநாதன், ஆறுமுகம், கண்ணன், நாஞ்சில் முருகேசன் ஆகியோருக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: தாய்மாமன் சீராக பூரண மதுவிலக்கை அமல்படுத்துங்க..! முதல்வருக்கு வேல்முருகன் வலியுறுத்தல்..!!