×
 

நிதிப்பகிர்வு... சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் நிறைவேற்றம்..! விஜய் அரசு அதிரடி முடிவு..!!

நிதிப்பகிர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேறப்பட்டது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிப்பகிர்வு தொடர்பான தனித் தீர்மானம் இன்று முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் நிதி அமைச்சர் மரிய வில்சன் இந்தத் தீர்மானத்தை முன்மொழிந்தார். இது ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரி வருவாய் பகிர்வில் நியாயமும் சமத்துவமும் நிலவ வேண்டும் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. இந்தத் தீர்மானம், இந்திய அரசியலமைப்பின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு ஏற்ப மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறது.

மத்திய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்களின் பங்களிப்புக்கு ஏற்பவும், நிதி முயற்சிகளுக்கு ஏற்பவும், ஆட்சித் திறனுக்கும், வளர்ச்சித் தேவைகளுக்கும் ஏற்பவும் நியாயமான பங்கு பெற வேண்டும் என்பதே அதன் மையக் கோரிக்கை. தற்போதைய பகிர்வு முறையில் வெளிப்படைத்தன்மை குறைவாக உள்ளதாகவும், சில மாநிலங்கள் தங்களின் சாதனைகளுக்காகவே பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக, மக்கள் தொகைக் கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற மாநிலங்களும், மனித வள மேம்பாட்டில் முன்னேறிய மாநிலங்களும் அதற்காகவே குறைந்த பங்கு பெறும் நிலை உருவாகக் கூடாது என தீர்மானம் வலியுறுத்துகிறது. தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் நீண்ட காலமாக மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தியும், கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளில் முன்னேறியும் வந்துள்ளன. ஆனால் நிதிப் பகிர்வு சூத்திரத்தில் மக்கள் தொகை மற்றும் தனிநபர் வருமான வேறுபாடு போன்ற காரணிகளுக்கு அதிக எடை கொடுக்கப்படுவதால், இந்தச் சாதனைகளே பாதகமாக மாறிவிடுகின்றன என்ற கருத்து பேரவையில் முன்வைக்கப்பட்டது.

இதையும் படிங்க: காவிரி நீரை பெறுவதில் சவால்..! சமரசமே கிடையாது... பேரவையில் அமைச்சர் ஆனந்த் திட்டவட்டம்..!!

தீர்மானம், மத்திய வரிகளின் பகிர்வுக்கு தெளிவான, புறநிலையான, சமத்துவமான முறையை ஏற்படுத்த வேண்டும் என கோருகிறது. இந்த முறை மாநிலங்களின் பங்களிப்பு, நிதி முயற்சி, ஆட்சித் திறன் மற்றும் வளர்ச்சித் தேவைகளை முறையாக அங்கீகரிக்க வேண்டும். அதேநேரம், எதிர்கால நிதிக் குழுக்கள் மற்றும் வரிப் பகிர்வு ஏற்பாடுகளில் தமிழ்நாட்டின் நியாயமான நிதி நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது. லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான விவாதங்களின் பின்னணியிலும் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு நீண்ட காலமாக ஒன்றிய அரசின் வரிப் பகிர்வில் தனது பங்கு குறைந்து வருவதாகக் கருதி வருகிறது. மாநிலத்தின் சொந்த வரி வருவாயும் குறைந்துள்ள நிலையில், ஒன்றியத்திலிருந்து கிடைக்கும் பங்கு மேலும் குறைந்தால் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களும் நலத்திட்டங்களும் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுவதன் அடிப்படையில் 

இதையும் படிங்க: மேகதாது பெரும் பிரச்சனை..! தமிழ்நாட்டிற்கு பேராபத்து...!! பேரவையில் எச்சரித்த சௌமியா அன்புமணி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share