×
 

சொல்லுங்க உதய்..! மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு செய்தது என்ன.? ஆதவ் அர்ஜுனா பேரவையில் கேள்வி..!

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை சட்டப்பேரவை கூடியது. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் தொடங்கிய இந்த நாளின் அலுவல்களில் முதலில் மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.

தொடர்ந்து, தமிழ் திரைத்துறை, இலக்கியம் மற்றும் இசைத்துறையில் தங்கள் பங்களிப்பால் நினைவுகூரப்படும் சில முக்கிய பிரபலங்களின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மேகதாது விவகாரம் குறித்தும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகவும் விவாதங்கள் நடைபெற்று வந்தன.

அப்போது, சட்டப் பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மேகதாது விவகாரத்தில் ஸ்டாலின் அரசு என்ன செய்தது என்ற கேள்வியை முன் வைத்தார். கர்நாடக அரசு மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தயார் செய்தது என்றும் அதை எதிர்த்து ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது எனவும் கூறினார். அதை உச்சநீதிமன்றம் 13/11/2025 அன்று தள்ளுபடி செய்தது என்றும் அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்தது எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேளச்சேரியில் துப்பாக்கி சூடுதல் போட்டி..! குறிப்பார்த்த அமைச்சர் ஆதவ்..! இளம் வீரர்கள் உற்சாகம்..!!

அந்த சீராய்வு மனுவும் 15/04/2026 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது என்று கூறியுள்ள அவர், அதை எதிர்த்தும் தமிழக அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. தமிழக உரிமை காக்கும் அந்த மறுசீராய்வு மனு மீது ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு உரிய வாதத்தை எடுத்து வைக்காததால் உச்சநீதிமன்றம் அந்த மனுவையும் 25/04/2026 அன்று தள்ளுபடி செய்தது என குறிப்பிட்டுள்ளார். மூன்று முறை தள்ளுபடி செய்ததற்கான விளக்கத்தை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி சொல்வாரா என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பினார். 

இதையும் படிங்க: வீடு தேடி மதுபானம்.? பகீர் கிளப்பிய தகவல்... அமைச்சர் விக்னேஷ் விளக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share