ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! பேரவையில் வன்னியரசு முக்கிய அறிவிப்பு..!
சட்டப்பேரவையில் சமூக நீதித் துறையில் புதிய அறிவிப்புகள் வெளியாகின.
சட்டப்பேரவையில் சமூக நீதி துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் வன்னியரசு வெளியிட்டார். சமூக நீதி விடுதிகளை பராமரிப்பதற்கான தொகை 50,000 ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்துள்ளது. பள்ளிகளுக்கான சமூக நீதி விடுதி உணவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தரமான சத்தான உணவு வழங்கும் பொருட்டு விடுதி மாணவர்களுக்கு வழங்கும் மாதாந்திர உணவு கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். கல்லூரி விடுதிகளுக்கான உணவு கட்டணம் 2000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது ஆதிதிராவிட பள்ளிகளுக்கான பராமரிப்பு தொகை உயர்கிறது என்று அமைச்சர் அறிவித்தார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 150 சமூக நீதி விடுதிகள் கட்டப்படும் என்று அமைச்சர் வன்னியரசு அறிவித்துள்ளார். தமிழகத்தில் சமூக நீதி நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக 150 சமூக நிதி விடுதிகள் கட்ட 160 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதி விடுதிகளை காண பராமரிப்பு தொகையை உயர்த்தி வழங்குவோம் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின கல்லூரி விடுதி ஆண்டு பராமரிப்பு தொகை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆதிதிராவிட மக்கள் சமுதாய நிகழ்வுகளை நடத்து 100 சமுதாய கூடங்கள் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்களை தொழில் முனைவோராக ஊக்குவிக்க கோவையில் வணிக மையம் அமைக்கப்படும். சென்னை நந்தனத்தில் பழங்குடியினர் பண்பாட்டு மையம் அமைக்கப்படும் என்று அமைச்சர் வன்னியரசு அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க: "தட்டுங்கள் திறக்கப்படும்"..! FCRA எதிர்ப்பு... முதல்வர் விஜய்க்கு பேரவையில் வன்னியரசு பாராட்டு.!
ஆதிதிராவிட குடும்ப தலைவிகளுக்காக விடிவெள்ளி மகளிர் வாழ்வாதார திட்டம் உருவாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர்களுக்கு சொந்த வீடு வழங்க அகம் திட்டம் தொடங்கப்படும் என்றும் 2500 கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் இடம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழங்குடியின மக்களின் சிறுதானிய விடைகளை ஆவணப்படுத்தும் வகையில் மரபு விதை.
ஆதிதிராவிடர் பழங்குடியினர் விடுதியை நிர்வகிக்க மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய அரண். மாணவர்களுக்கு பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான கல்விக்கு உகந்த தங்குமிடம் சூழலை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். வீடற்ற ஆதிதிராவிடர் குடும்பங்களுக்காக இனிய இல்லம் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ஜெய்ஹிந்த் ஶ்ரீமான்..? ஜெய் ஶ்ரீராம்..? ஒரு அமைச்சர் இப்படியா பேசுறது..! வன்னியரசை பந்தாடிய நயினார்.!