×
 

செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!

செப்டம்பர் 8 ஆம் தேதி வரை சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2026-2027 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பித்தார். காலை 10.01 மணிக்குத் தொடங்கிய அவரது உரை சுமார் இரண்டரை மணி நேரம் நீடித்து, மதியம் 12.31 மணிக்கு நிறைவடைந்தது.

பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் கால அளவு குறித்து முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் செப்டம்பர் 8 ஆம் தேதி வரை நீடிக்கும் என சபாநாயகர் அறிவித்தார்.நாளை (ஆகஸ்ட் 6) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆகஸ்ட் 7 ஆம் தேதி மறைந்த பிரபலர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

அதன்பிறகு பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கும். ஆகஸ்ட் 8 மற்றும் 9 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாட்களாக இருப்பதால், ஆகஸ்ட் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் விவாதம் தொடரும். ஆகஸ்ட் 12 ஆம் தேதி பட்ஜெட் மீதான பதிலுரை அளிக்கப்படும். சுதந்திர தின விழா ஏற்பாடுகள் காரணமாக ஆகஸ்ட் 13, 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது.சட்டப்பேரவைக் கூட்டங்கள் பொதுவாக காலை 9.30 மணிக்குத் தொடங்கும். தேவைப்பட்டால் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படும். கூட்டத்தொடர் முழுவதும் நேரலை ஒளிபரப்பு செய்யப்படும் எனவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: விஜய் அரசின் பட்ஜெட்டுக்கு ZERO மார்க்..! ஸ்டிக்கர் தான் மாற்றமா..? உதயநிதி தாக்கு..!

செப்டம்பர் 7 ஆம் தேதி காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான விவாதத்தில் முதலமைச்சர் விஜய் பதிலுரை அளிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்த அறிவிப்பு தவெக அரசின் முதல் முழு பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதால் அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் பாமக ஆகியவை கூட்டத்தொடர் நாட்களை அதிகரிக்கக் கோரியதாகவும் செய்திகள் வந்துள்ளன. சட்டப்பேரவையில் இந்த நீண்ட அமர்வு மூலம் பல்வேறு துறைகள் தொடர்பான விவாதங்கள் விரிவாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கடன் வாங்கி தான் ஆகணும்..! அமிர்தமும் நஞ்சாகும்..! பட்ஜெட்டை விமர்சித்து தள்ளிய இபிஎஸ்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share