×
 

காவல்துறை மானியக் கோரிக்கை... ரூ.212 கோடியில் நவீன மயமாகும் காவல் நிலையங்கள்..! CM விஜய் அறிவிப்பு..!!

காவல்துறைக்கான மானிய கோரிக்கையை முதல்வர் விஜய் தாக்கல் செய்தார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் என் அறிவிப்புகளை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து நீதிமன்றங்களில் தமிழே வழக்காடு மொழி என்பதை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. தனி தீர்மானத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்து பேசினார்.

பின்னர் காவல்துறை மீதான மானிய கோரிக்கையை முதல்வர் விஜய் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மைதான விவாதத்தை முதல்வர் விஜய் முன்மொழிந்தார். கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்து ஐந்து ஆண்டுகளில் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். காவல் நிலையங்களில் 29 ஆயிரத்து 108 கூடுதல் காவல் பணியிடங்கள் அடுத்து ஐந்து ஆண்டுகளில் உருவாக்கப்படும் என்று தெரிவித்தார்.

போதைப் பொருளை ஒழிக்கும் கிராமங்களுக்கு பத்து லட்ச ரூபாய் வீதம் 50 கிராமங்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். இந்த ஆண்டு ஐந்தாயிரம் பெண் காவலர்கள் உட்பட பத்தாயிரம் பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும் 212 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் காவல்துறை நவீன மயமாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். காவல்துறை சிறப்பு பிரிவுகளுக்கு எதிர்பாரா செலவினம் உயர்த்தப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்.! ஒலிம்பிக் நகரம், மோட்டார் சிட்டி..!! பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு..!

பணியின் போது துணிச்சலுடன் பணியாற்றி உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் முதல்வர் விஜய் அறிவித்தார். பணியின் போது உயிரிழக்கும் காவல்துறை குடும்பத்திற்கு தரப்படும் கருணத்தொகை 20 லட்சத்திலிருந்து 30 லட்சமாக உயர்த்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். வண்டலூரில் உள்ள காவலர் உயர் பயிற்சியகத்தில் உள்விளையாட்டு அரங்கு மற்றும் விளையாட்டு வசதிகள் 23 கோடி யில் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தார். 

இதையும் படிங்க: தொகுதி சார்ந்த தேவைகள்.. வினாக்கள் - விடைகள்..!! சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடக்கம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share