இதுதான்யா உண்மையான காதல்❤️❤️❤️..!! திருநங்கையை கரம்பிடித்த ஆவடி வாலிபர்!! சுவாரசிய கதை..!!
முதலில் இன்ஸ்டாகிராம் மூலமே எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. 7 வருடங்களாக பழகி வந்தோம்.
திருவள்ளுவர் மாவட்டத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவரும், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த திருநங்கை ஒருவரும் இன்ஸ்டாகிராம் வழியாக அறிமுகமாகி 7 ஆண்டுகள் காதல் பயணத்தைத் தொடர்ந்து, நேற்று கோபியில் சட்டப்படி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.
திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள மோரை பகுதியைச் சேர்ந்த பிரவீன் ராஜ், கணினி தகவல் தொழில்நுட்பம் படித்து சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 2019-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் மூலம் திருச்செங்கோடு அருகே உள்ள வருகூராம்பட்டியைச் சேர்ந்த திருநங்கை கயல்விழியைச் சந்தித்தார்.
முதலிலேயே அவர் திருநங்கை என்பது தெரிந்திருந்தாலும், நட்பாகத் தொடங்கிய உறவு இரண்டு ஆண்டுகள் நீடித்தது. திருச்செங்கோடு சென்று நேரில் சந்தித்த பிறகு காதல் முளைத்தது. முதலில் பிரவீன் ராஜ் தனது காதலை வெளிப்படுத்தினார். கயல்விழி உடனடியாக ஏற்காமல் நண்பர்களாகவே இருக்கலாம் என்றார். பின்னர் இருவரும் காதலில் விழுந்தனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாவில் மாஸ் காட்டும் விஜய்..!! ராகுலை பின்னுக்குத் தள்ளிய 1.87 கோடி ஃபாலோவர்ஸ்..!!
இந்தக் காதலை வீட்டில் தெரிவித்தபோது பிரவீன் ராஜின் குடும்பத்தினர் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் கயல்விழியின் குடும்பம் ஏற்றுக்கொண்டது. இதற்கிடையே வீட்டில் பெண் பார்க்கும் ஏற்பாடுகள் நடந்ததால், மேலும் தாமதிக்க முடியாமல் இருவரும் கோபியில் மனித சட்ட உதவி மையத்தை அணுகி சுயமரியாதை திருமணம் செய்துகொண்டனர்.
கயல்விழி சினிமாத் துறையில் ஈடுபட்டுள்ளார். ‘தோற்றம்’, ‘கந்தமலை’ போன்ற படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது வெப் சீரியல் ‘டாசிக் பார்ட்டி’யில் நடித்து வருகிறார். “மூன்று ஆண்டுகளுக்கு முன் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணம் செய்தோம். ஆனால் சான்றிதழ் கேட்டபோது திருநங்கைக்குத் திருமணம் செய்து வைக்கவில்லை என்று மறுத்துவிட்டனர்.
அதைப் பயன்படுத்தி பிரவீன் ராஜை சென்னையில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். அங்கு அவர் மூன்று ஆண்டுகள் இருந்தார். பின்னர் அவசரமாக வேறு பெண் நிச்சயம் செய்யப்பட்டதால் அவர் வீட்டை விட்டு வெளியேறி திருச்செங்கோடு வந்தார். அதன் பிறகுதான் சட்டப்பூர்வமாகத் திருமணம் செய்தோம்,” என்று கயல்விழி கூறினார்.
தற்போது இருவரும் திருச்செங்கோட்டில் உள்ளனர். “மாமியார் வீட்டில் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. பிரவீன் ராஜுக்கு நல்ல மனைவியாகவும், குடும்பத்திற்கு நல்ல மருமகளாகவும் இருப்பேன்,” என்று கயல்விழி உறுதியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!