×
 

சாதி வெறியருக்கு கலைமாமணி விருதா? கொந்தளிக்கும் பகுத்தறிவாளர்கள்...!

சாதி வெறியருக்கு கலை மாமணி விருது வழங்குவதா என பகுத்தறிவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.

தமிழ்நாட்டின் பண்பாட்டு மற்றும் கலைத் துறைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களை போற்றும் மிக முக்கியமான விருதாக 'கலைமாமணி' அறியப்படுகிறது. இது தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் உயர்ந்த சிவில் விருதாகும், இது கலை, இலக்கியம், இசை, நாடகம், நடனம் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளில் பங்களிப்பு செய்தவர்களுக்கு அளிக்கப்படுகிறது. தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை வளர்த்து, பாதுகாத்து, உலக அளவில் பரப்பிய கலைஞர்களின் உழைப்பை இந்த விருது அங்கீகரிக்கிறது.

1960களின் முற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த விருது, இன்று வரை ஆயிரக்கணக்கான கலைஞர்களின் வாழ்க்கையை கௌரவப்படுத்தியுள்ளது. இதனிடையே, வள்ளி கும்மியாட்டத்திற்காக KKC. பாலு என்பவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கேகேசி பாலு கொங்கு மக்கள் கட்சியின் உறுப்பினராகவும் இருப்பவர். இவருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாதி வெறியருக்கு கலைமாமணி விருது வழங்குவதாக பகுத்தறிவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனது சாதியைச் சேர்ந்த பெண்களிடம் சொந்த சாதியில் திருமணம் செய்வேன் என சத்தியம் வாங்கியவர் கே கே சி பாலு என தெரிவித்தனர். கே கே சி பாலுவின் பழைய வீடியோவை பகிர்ந்து தமிழக அரசை சாடி வருகின்றனர். 

இதையும் படிங்க: வெடித்தது போராட்டம்... நேபாளத்தில் சிக்கித் தவித்த தமிழர்கள் மீட்பு! துரித கதியில் நடவடிக்கை

இயல், இசை, நாடக மன்றத்தின் செயலால் அதிருப்தி அடைந்திருப்பதுடன், தமிழக அரசுக்கு சரமாரி கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். நாடகக் காதல், சாதிக்குள் திருமணம் ஆகியவற்றை ஆதரித்து பேசியவர் கே கே சி பாலு என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். அவருக்கு கலைமாமணி விருது வழங்குவதற்கு பதிலாக கொலை மாமணி விருது வழங்கலாம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள கலைமாமணி விருதை திரும்ப பெற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க: தமிழக அரசின் Dr. ராதாகிருஷ்ணன் விருது... நல்லாசிரியர்களுக்கு வழங்கி கவுரவிக்கும் துணை முதல்வர்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share