காலையிலேயே பயங்கரம்... டீ குடிக்க நின்ற ஐயப்ப பக்தர்கள் ...சரக்கு வாகனம் மோதி துடிதுடித்து பலி...!
ஆம்பூர் அருகே சாலை கடக்க நின்று கொண்டு இருந்த ஐயப்பா பக்தர்கள் மீது சரகு வாகனம் மோதி விபத்து. 2 பேர் பலி,2 பேர் படுகாயம்.
கேரள மாநிலத்தில் அமைந்துள்ள சபரிமலையில் உள்ள ஐயப்பனை தரிசிக்க கார்த்திகை மாதம் தொடங்கியது முதலில் மாலை அணிந்து 48 நாட்கள் விரதம் இருந்து மலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு கடுமையாக விரதம் இருந்து ஐயப்பனை தரிசிக்க ஆவலுடன் செல்லும் பக்தர்கள் எதிர்பாராத விதமாக சாலை விபத்துகளில் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஐயப்ப பக்தர்கள் சென்ற கார் மீது பால் வேன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ஜெய் நகர் பகுதியில் சேர்ந்த லட்சுமி காந்தன் என்ற ஐயப்ப பக்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனிடையே, ஆம்பூர் அருகே இரண்டு ஐயப்ப பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆம்பூர் அருகே சாலை கடக்க நின்று கொண்டு இருந்த ஐயப்பா பக்தர்கள் மீது சரகு வாகனம் மோதி விபத்து. 2 பேர் பலி,2 பேர் படுகாயமடைந்தார்.
இதையும் படிங்க: #BREAKING பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கிய ஒன்றரை வயது குழந்தை... தாய் கண்முன்னே அரங்கேறிய சோகம்...!
திருவள்ளுவர் மாவட்டம் திருத்தணி அடுத்த முருகம்பட்டு கிராமத்தில் இருந்து குழந்தைகள் 6 பேர் உட்பட 36 பேர் கடந்த 13 ஆம் தேதி பேருந்து மூலமாக சபரிமலைக்கு சென்று சாமி கும்பிட்ட பின்னர் இன்று மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் தேநீர் குடிப்பதற்காக பேருந்து நிறுத்தியுள்ளார்.
அப்போது சாலை கடக்க நின்று கொண்டு இருந்த ஐயப்பா பக்தர்கள் மீது அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் திருத்தணி அடுத்த முருகம்பட்டு கிராமத்தை சேர்ந்த ஐயப்பா பக்தர்கள் கங்காதரன், சூர்யா, ஹரி,நரசிம்மன் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்களை பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கங்காதரன், சூர்யா இருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளனர். நரசிம்மன் மற்றும் ஆதி ஆகிய இருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆம்பூர் கிராமிய போலீஸார் இறந்தவர்களின் பிரேதத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: எமனாக மாறிய யூரியா லாரி... தூக்கி வீசப்பட்ட தந்தை, மகள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலி...!