இனிமே இபிஎஸ் தான்! அந்தர் பல்டி அடித்த செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளர்..!
செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான பன்னாரி எம்எல்ஏ எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்தார்.
அ. பண்ணாரி அதிமுகவில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். இவர் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பவானிசாகர் தொகுதியில் அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தத் தேர்தலில், இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.எல். சுந்தரத்தை 16,008 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 99,181 வாக்குகளுடன் முதலிடம் பெற்றார்.
இந்த வெற்றி, பவானிசாகர் தொகுதியில் அதிமுகவின் ஆதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியது.பவானிசாகர் தொகுதி, ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதி. இது நீலகிரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. 1967 ஆம் ஆண்டு முதல் இந்தத் தொகுதி பல அரசியல் மாற்றங்களைக் கண்டுள்ளது. ஆனால், 2021 இல் பண்ணாரியின் வெற்றி, இவரது மக்கள் மத்தியில் செல்வாக்கையும், அதிமுகவின் தொடர்ச்சியான பலத்தையும் வெளிப்படுத்தியது.
அ. பண்ணாரி, தனது தொகுதியில் மக்களுக்கு சேவையாற்றுவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றி வருகிறார். பண்ணாரி, செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளராக இருந்து, ஈரோடு மாவட்டத்தில் அவருக்கு உறுதுணையாக செயல்பட்டார். செப்டம்பர் 2 ஆம் தேதி, கோபிச்செட்டிப்பாளையத்தில் செங்கோட்டையன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கூட பண்ணாரி கலந்து கொண்டார்.
இதையும் படிங்க: வர 9ஆம் தேதி சம்பவம் இருக்கு! முக்கிய அறிவிப்பை வெளியிடும் செங்கோட்டையன்...
இந்த நிலையில், பவானிசாகர் MLA பண்ணாரி அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ்-ஐ சந்தித்தார். சந்திப்புக்கு பின் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பவானிசாகர் நிர்வாகிகள் இயங்குவார்கள் என அளித்துள்ளார்.
இதையும் படிங்க: இந்த அவமானம் தேவையா? - செங்கோட்டையன் விவகாரத்தில் வசமாக சிக்கிய பொன்னையன்...!