ஒரு மணி நேரத்தில வாஷ் அவுட் ஆகணும்! காவல்துறைக்கு மதுரை கிளை அதிரடி உத்தரவு!
பேனர்கள் மற்றும் கொடிக்கம்பங்களை ஒரு மணி நேரத்தில் அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது இடங்களில், குறிப்பாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் பொது பயன்பாட்டு இடங்களில் அனுமதியின்றி கொடிக்கம்பங்கள் மற்றும் பேனர்கள் நிறுவப்படுவது நீண்ட காலமாகவே பிரச்சனையாக இருந்து வருகிறது. இவை பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், நகரின் அழகியல் தோற்றத்திற்கு பங்கமாகவும் இருப்பதாக பல்வேறு தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டு, மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் கதிரவன் மற்றும் சித்தன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, மதுரையில் குறிப்பிட்ட இடங்களில் கொடிக்கம்பங்கள் அமைப்பதற்கு
அனுமதி கோரியதாக இருந்தாலும், பொது இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு ஒரு முக்கியமான தீர்ப்புக்கு வழிவகுத்தது.2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, பொது இடங்கள், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள், உள்ளாட்சி இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையும் படிங்க: OTP விவகாரம்... திமுகவின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த நிலையில், அனுமதி பெறாமல் வைத்த பேனர் கொடிக்கம்பங்களை ஒரு மணி நேரத்தில் அகற்ற மதுரை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்தில் அகற்றிய உடன் அறிக்கை தரவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொடிக்கம்பம் குறித்து மதுரையில் ஆய்வு செய்ய நாங்கள் தயார் என்றும் ஒத்துழைப்பு தருவதற்கு அரசு தரப்பு தயாரா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: அஜித் குமார் கஸ்டடி மரணம்! போலீசார் குடும்பத்தினரிடம் விசாரிக்க அதிகாரிகள் முடிவு...