OPS- காக உயிரை விட முடியுமா ? வாழ்நாளை வீணடிக்க முடியாது... பண்ருட்டி ராமச்சந்திரன் திட்டவட்டம்..!!
பண்ருட்டி ராமச்சந்திரன் புதிய இயக்கத்தை தொடங்கி உள்ளார்.
பண்ருட்டி ராமச்சந்திரன் தமிழக அரசியலில் நீண்டகாலமாக இருக்கும் ஒரு மூத்த தலைவர். 1937 நவம்பர் 10-ஆம் தேதி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே புலியூர்காட்டுசாகை என்ற கிராமத்தில் பிறந்தவர் இவர். அரசியல் பயணத்தை மிக இளம் வயதிலேயே தொடங்கியவர். கல்லூரி காலத்தில் தான் அண்ணாவை சந்தித்து திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். 1967-ல் முதல் முறையாக பண்ருட்டி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினரானார்.
அப்போதிருந்து அவர் பலமுறை அதே தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். மொத்தம் ஆறு முறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.அவரது அரசியல் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது. முதலில் திமுகவில் இருந்து தொடங்கி, மு.கருணாநிதி அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். பின்னர் எம்ஜிஆர் தலைமையில் அதிமுக உருவானபோது அதில் இணைந்து, எம்ஜிஆரின் நெருங்கிய தளபதிகளில் ஒருவரானார். எம்ஜிஆர் அமைச்சரவையில் பல முறை அமைச்சராக பணியாற்றினார்.
ஜெயலலிதா காலத்திலும் சில கட்டங்களில் இருந்தாலும், பின்னர் பாமக போன்ற கட்சிகளில் சேர்ந்து பணியாற்றினார். 2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் ஆலோசகராக, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் செயல்பட்டு வந்தார். இந்த சூழலில்தான், பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு புதிய இயக்கத்தை தொடங்கினார். கட்சியின் பெயர் எம்.ஜி.ஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
இதையும் படிங்க: 88 வயதில் களத்தில் இறங்கிய பண்ருட்டி ராமச்சந்திரன்..!! உதயமான புதிய கட்சி..!!
சென்னையில் நிருபர்களை சந்தித்து இதை அறிவித்தபோது, அரசியல் மக்களுக்கானது, தனி ஒருவருக்கானது அல்ல என்று தெளிவாக கூறினார். இந்த இயக்கம் தேர்தலில் நேரடியாக போட்டியிடாது என்றும், விரும்புபவர்கள் சுயேட்சையாக நின்று அவர்களது ஆதரவுடன் போட்டியிடலாம் என்றும் தெரிவித்தார். கட்சியின் பொதுச்செயலாளராக காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித்குமார் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுக சாதனைகள் மீது திமுக சவாரி... என்னதான் ஆச்சு ஸ்டாலினுக்கு? விளாசிய EPS..!!
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ் சகாப்தம் முடிந்ததாக தெரிவித்தார். அரசியல் என்பது ஒருவருக்கானது அல்ல எனவும் நாடு முக்கியமான கட்டத்தில் இருப்பதாக தெரிவித்தார். தன்னைப் பொறுத்தவரை ஒரு உறுதியான அரசியலை கொண்டு செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ஓபிஎஸ்- காக உயிரை விட முடியுமா என்று கேள்வி எழுப்பினார். தங்களுக்காக ஒரு பாதையை வகுத்து இருப்பதாகவும், அதன்படி பயணிப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.