தமிழ்நாடு அரசு செயலாளர் பீலா வெங்கடேசன் காலமானார்... வெளியானது பகீர் காரணம்...!
தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளர் பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ். உடல் நலக்குறைவால் காலமானார்.
தமிழக எரிசக்தித்துறை முதன்மை செயலாளரும், ஐஏஎஸ் அதிகாரியுமான டாக்டர் பீலா வெங்கடேசன், 55, உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கொரோனா பெருந்தொற்று பரவிய காலகட்டத்தில், நோய்த்தொற்று பாதிப்புகள், உயிரிழப்புகள், மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தினசரி செய்தியாளர்களைச் சந்தித்து, மக்களுக்குத் தெளிவான தகவல்களை அளிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அவரது திறமையான மற்றும் வெளிப்படையான அணுகுமுறை, அவரை மக்கள் மத்தியில் நன்கு பிரபலப்படுத்தியது. சுகாதாரத்துறை பணிக்குப் பிறகு, பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய அவர், இறுதியாக தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்தார்.
பீலே வெங்கடேசனுக்கு என்ன ஆனது?
மூளையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக கடந்த 2 மாதங்களாக சென்னையில் உள்ள மருத்துவமனைவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அந்த சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதையும் படிங்க: உளுந்து, பச்சைப்பயறுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்.. தமிழக அரசு அறிவிப்பு..!!
யார் இந்த பீலா வெங்கடேசன்?
1969ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வாழையடி என்ற இடத்தில் பிறந்தார் பீலா வெங்கடேசன். இவரது தாய் ராணி வெங்கடேசன் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவரது தந்தை எல்.என். வெங்கடேசன் ஐபிஎஸ், டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர்.
பீலா வெங்கடேசன் சென்னை மருத்துவக் கல்லூரியில் MBBS பட்டம் பெற்றவர். அதன் சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அவர், 1997-ம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். இவர், ஐபிஎஸ் அதிகாரியான ராஜேஷ் தாஸ் என்பவரை திருமணம் செய்த நிலையில், சமீபத்தில் தான் அவரிடமிருந்து விவாகரத்து கோரியிருந்தார்.
ஆரம்பத்தில் பீலா ராஜேஷ் என அழைக்கப்பட்ட அவர், விவாகரத்திற்கு பிறகு பீலா வெங்கடேசன் என தனது பெயரை மாற்றிக் கொண்டார்.
இதையும் படிங்க: என்ன டிரஸ் இது..?? மோசமாக பேசிய பூ வியாபாரிகள்.. லெஃப்ட் ரைட் வாங்கிய சட்ட மாணவி..!!