×
 

முதல்ல பூஸ்ட் டப்பா... இப்ப பீர் பாட்டிலா?... சந்தி சிரிக்கும் தவெக வேட்பாளரின் மாற்று அரசியல்...!

தங்கள் கட்சி வேட்பாளர் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பதிவிட்ட மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தவெகவினர் புகார் அளித்துள்ளனர். 

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தமிழக தேர்தல் களம் மீண்டும் ஒருமுறை சூடுபிடித்துள்ளது. “மாற்றம்” என்ற வாசகத்துடன் அரசியல் களத்தில் குதித்துள்ள தமிழக வெற்றிக் கழகம், தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவரும் முயற்சிகளில் தீவிரம் காட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழகத்தில் தேர்தல் என்றாலே பரிசுப் பொருட்கள், பண விநியோகம், வாக்காளர்களை நேரடியாக கவரும் உத்திகள் போன்றவை புதியவை அல்ல. பல ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக மீது இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்து வந்துள்ளன. ஆனால் “அந்த அரசியலை மாற்றுவோம்” என்ற உறுதியுடன் வந்த கட்சியும் அதே பாதையில் நடக்கிறது என்ற தகவல்கள் வெளியாகும் போது, அது அரசியல் நகைச்சுவையா அல்லது கவலைக்குரிய நிலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 

தேர்தல் விதிமுறைகளை கண்காணிக்க அமைக்கப்பட்டுள்ள பறக்கும் படைகள், இப்போது தவெகவினரின் “மிஷன்” மீது தீவிரமாக கண்காணிப்பு வைத்துள்ளன. பல இடங்களில் பரிசுப் பொருட்களுடன் பயணம் செய்ததாகக் கூறப்படும் நிர்வாகிகள், அதிகாரிகளிடம் சிக்கிய சம்பவங்கள் வெளியாகி வருகின்றன. வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மின்னணு சாதனங்கள் வரை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதையும் படிங்க: அங்கீகாரம் இல்ல..! வில்லிவாக்கம் வேட்பாளர் முன்னிலையில் திமுகவுக்கு தாவிய TVK சப்போட்டர்ஸ்.!

கடந்த மார்ச் 18ம் தேதி நாமக்கல்லில் தவெக ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பூஸ்ட் பாட்டில் இருந்த வீடியோ இணையத்தில் தாறுமாறு வைரலானது. தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு விசில் சின்னம் பொறிக்கப்பட்ட தட்டு, சில்வர் டப்பா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. 

தற்போது, பீர் பாட்டிலில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஸ்டிக்கருடன் வாக்கு சேகரிக்கப்படுவதாக  சமூக வலைத்தளங்களில் பரவும் புகைப்படத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளராக சபரி ஐங்கரன் போட்டியிடுகிறார். இவர் கடந்த சில நாட்களாக பெரியகுளம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

இந்த நிலையில் மதுபான பீர் பாட்டிலில் தவெக வேட்பாளர் சபரி ஐயங்கரன், தவெக தலைவர் விஜய் புகைப்படத்துடன் விசில் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவியது

இதனால் அதிர்ச்சி அடைந்த பெரியகுளம் தொகுதி தவெகவினர் தங்கள் கட்சி வேட்பாளர் மீது களங்கம் விளைவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருவதாக கூறி பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சார் ஆட்சியருமான ரஜத் பீடனிடம் புகார் அளித்துள்ளனர்.

தேர்தல் விதிமுறைகளை மீறி தங்கள் கட்சி வேட்பாளர் மீது களங்கம் விளைவித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தவெக நிர்வாகிகள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.
 

 

இதையும் படிங்க: பவள விழா பாப்பா...! ஆட்டம் ஏப்ரல் 21 வரைக்கும் தான்..! உஷாராக இருக்க விஜய் அறிவுறுத்தல்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share