×
 

5 நட்சத்திர ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவு! 76 கிலோ மாட்டிறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகள் பறிமுதல்!

பெங்களூருவில் உள்ள லலித் அசோக், ஷாங்ரிலா, விவந்தா, தாஜ் யஸ்வந்த்பூர், ரேடிஷன்புளூ ஆகிய நட்சத்திர ஹோட்டல்களில் கெட்டுப்போன 76 கிலோ மாட்டிறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

பெங்களூரு: கர்நாடகாவில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் தரம் குறித்து தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள லலித் அசோக், ஷாங்ரிலா, விவந்தா, தாஜ் யஸ்வந்த்பூர், ரேடிஷன் புளூ உள்ளிட்ட ஹோட்டல்களில் நடத்தப்பட்ட சோதனையில், கெட்டுப்போனதாகக் கண்டறியப்பட்ட 76 கிலோ மாட்டிறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகள் மற்றும் காலாவதியான 32 லிட்டர் பால் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு மட்டுமின்றி கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் மூன்று மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் உணவின் தரம் தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வந்ததாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து புகார்களை ஆய்வு செய்ய சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தைகள் சாப்பிடும் பாக்கெட் உணவில் இவ்வளவு சர்க்கரையா? FSSAI-க்கு முக்கிய பரிந்துரை!

இந்த குழுக்கள் பல்வேறு ஹோட்டல்களுக்குச் சென்று உணவு தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களை ஆய்வு செய்து வருகின்றன. மேலும், உணவுப் பொருட்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தரப் பரிசோதனைக்கும் அனுப்பப்படுகின்றன.

ஆய்வின்போது, பயன்படுத்துவதற்கு ஏற்ற நிலையில் இல்லாத உணவுப் பொருட்கள் கண்டறியப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அவற்றில் 76 கிலோ மாட்டிறைச்சி, 200 கிலோ அழுகிய காய்கறிகள் மற்றும் காலாவதியான 32 லிட்டர் பால் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், காலாவதியான அல்லது தரமற்ற உணவுப் பொருட்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஹோட்டல்கள் மட்டுமின்றி, அனைத்து உணவகங்களும் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான உணவை வழங்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். உணவு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது பல்வேறு ஹோட்டல்களில் உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்று வருவதால், மேலும் விதிமீறல்கள் கண்டறியப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. உணவகங்கள் மற்றும் ஹோட்டல்களில் சுகாதார விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இனி AI தெரிந்தவர்களுக்குத்தான் டிமாண்ட்? இந்திய வேலை சந்தை குறித்து ஆய்வில் வெளியான தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share