பீகார் சட்டமன்றத் தேர்தல்… அதி முக்கிய அறிவிப்பு வெளியீடு…!
பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதிக்கு முன் நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.
பீகார் சட்டமன்ற தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பீகார் சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதிக்கு முன் நடைபெறும் என கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி மற்றும் ஆதார் சட்டத்தின் கீழ், பிறப்பு தேதி, வசிப்பிடச் சான்று அல்லது குடியுரிமைச் சான்றாக ஆதாரைக் கருத முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையம் கணக்கெடுப்பு படிவத்திலேயே ஆதார் அட்டையைக் கோரியது என்றும் ஆதார் சட்டத்தின் கீழோ அல்லது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950 இன் பிரிவு 26 இன் கீழோ உங்கள் ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமில்லை. இது விருப்பமானது எனவும் தெரிவித்தார். இது ஆதார் வைத்திருப்பவரைப் பொறுத்தது என்றும் ஆதார் சட்டத்தின் கீழும் கூட, ஆதார் அட்டை வசிப்பிடச் சான்றோ அல்லது குடியுரிமைச் சான்றோ அல்ல எனவும் தெரிவித்தார்.
2023 க்குப் பிறகு யாராவது ஆதார் அட்டையைப் பெற்றிருந்தால் அல்லது 2023 க்குப் பிறகு அதைப் பதிவிறக்கம் செய்திருந்தால், உச்ச நீதிமன்றத்தின் பல உத்தரவுகளின் கீழ் ஆதார் அட்டையே பிறந்த தேதிக்கான சான்றல்ல என்று கூறுகிறது என்று கூறினார். ஆதார் அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது என்றும் மேலும் அந்த உத்தரவைப் பின்பற்றுகிறோம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: #biharelection: சூடுபிடிக்கும் களம்... பாஜக தேர்தல் பொறுப்பாளராக தர்மேந்திர பிரதான் நியமனம்...!
கணக்கெடுப்பு படிவத்திலும் ஆதார் அட்டைகளை ஏற்றுக்கொண்டோம் என்றும் இருப்பினும், உச்ச நீதிமன்றம் தனது உத்தரவில் ஆதார் அட்டை குடியுரிமைக்கான சான்றாக இருக்காது என்றும் கூறியது., உச்ச நீதிமன்றம் அது குடியுரிமைக்கான சான்றாக இருக்காது என்றும் கூறியுள்ளது என தெரிவித்தார். எனவே தகுதிக்கு பிற ஆவணங்கள் தேவைப்படலாம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உத்வேகம் அளிக்கும் வேளாண் வணிக திருவிழா... நாளை கோலாகலத் தொடக்கம்...!