போட்றா வெடிய...!! பீகார் தேர்தலில் செஞ்சூரி விளாசிய பாஜக... வரலாறு காணாத முன்னிலை...!
பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இப்போது தொடங்கியிருக்கிறது
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் சரியாக 8:00 மணிக்கு தொடங்கியிருக்கிறது. அங்க இருக்கக்கூடிய அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் ஒரே நேரத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. அடுத்தடுத்து சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்பட இருக்கின்றன.
கிட்டத்தட்ட ஒரு 7 கோடி வாக்காளர் இருக்கின்ற அந்த மாநிலத்தில ஏறத்தாழ ஒரு 67% வாக்குகள் பதிவாகி இருந்தன. பீகாரில் இருக்கக்கூடிய இந்த 38 மாவட்டங்களில் இருக்கக்கூடிய 46 மையங்களிலும் இந்த 67 சதவீத வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி இருக்கிறது.
பீகார் சட்டப்பேரவை தேர்தலை பொறுத்தவரை 2000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். முதலமைச்சராக இருக்கக்கூடிய நிதீஷ் குமார் பாஜக அணியின் சார்பில் தற்பொழுதும் போட்டியில் இருக்கின்றார். அதேபோன்று தேஜஸ் யாதவ் காங்கிரஸ் இடதுசாரிகளோடு கூட்டணி அமைத்து இறங்கி உள்ளார். பீகாரைப்பொறுத்தவரை பெண்களுடைய வாக்குகளை யார் பெறுகின்றார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள் என்பது ஒரு எழுதப்படாத விதியாக இருக்கின்றது.
இதையும் படிங்க: #BREAKING பீகாரில் ஆட்சி அமைக்கப் போவது யார்? - தொடங்கியது வாக்கு எண்ணிக்கை ...!
ஏறக்குறைய ஒரு கோடி 40 லட்சம் பெண்கள் மட்டும் மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கின்றார்கள். இதுவரை பெண்களுடைய வாக்குகள் நிதீஷ் குமாருக்கு மட்டுமே பதிவாகி வந்ததால், கடந்த ஒரு ஏறக்குறைய 20 ஆண்டுகளாக பீகாரினுடைய அசைக்க முடியாத முதலமைச்சராக நிதீஷ் குமார் இருந்து வருகின்றார். அதை அசைத்து பார்ப்பதற்காகத்தான் பெண்களுக்கு மாதம்தோறும் 2500 ரூபாய் உட்பட பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அறிவிப்புகளை வெளியிட்டு தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகா கூட்டணி களமிறங்கியது.
இரு தரப்பினரும் மாறி மாறி பெண்களை காரும் விதமாக அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில் இந்த முறை பி கார்த்தி ஏத்தலிலும் பெண் வாக்காளர்களின் வாக்குப்பதிவு வரலாறு காணாத வகையில் அதிகமாக பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் படி நித்திஷ் குமார் தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 140 முதல் 160 இடங்களை கைப்பற்ற கூடும் என்றும், தலைமையிலான மகா கூட்டணி 60 முதல் 90 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்றும் கணித்திருந்தன.
தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை உண்மையாக்கும் வகையில், என்.டி.ஏ.கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.தபால் வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப நிலையில், மகாகத்பந்தன் கூட்டணியை விட பா.ஜ.க 100 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா கூட்டணி வெறும் 44 இடங்களில் மட்டுமே முன்னிலை வகுத்து வருகிறது. தீபா தேர்தலில் வெற்றி பெற 122 தொகுதிகள் தேவை என்ற நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே பாஜக கூட்டணி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளின் முன்னிலை வகிப்பது அக்கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: பீகார் அரியணையில் ஏறப்போவது யார்?... ஆர்ஜேடி Vs பாஜக வேட்பாளர்கள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ...!