×
 

நான் பேசுனா சினிமா டயலாக்காம்… CM சிலப்பதிகாரத்துல இருந்து பேசுனாரா? நக்கலடித்த விஜய்..!

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்திய விஜய் முதலமைச்சர் ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்தும் விஜயமங்கலத்தில் கூடி இருந்த கூட்டத்தை பார்த்து கையசைத்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார். தொடர்ந்து மக்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார் விஜய். முதல்வர் ஸ்டாலினையும் திமுக அரசையும் கடுமையாக விஜய் விமர்சித்துள்ளார். பொதுவாகவே விஜய் பொதுக்கூட்டம், மக்கள் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பேசும்பொழுது சினிமா டயலாக் பேசுகிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

 

சினிமாவில் பேசுவதைப் போல விஜய் பேசி விட்டு செல்கிறார் என்ற விமர்சனங்கள் எழுகின்றன. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை நிகழ்த்தி இருந்தார். அப்போது என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்றீங்க என்று பேசி இருந்தார். இதனை ஈரோடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜய் சுட்டிக்காட்டி பேசினார். 

இதையும் படிங்க: நாளை ஈரோடு வரும் விஜய்..!! மூடப்படும் டாஸ்மாக் கடைகள்..!! பறந்த அதிரடி உத்தரவு..!!

நான் பேசினால் சினிமா டயலாக்., முதல்வர் பேசினால் சினிமா டயலாக் இல்லையா என்று கேட்டார். முதலமைச்சர் பேசியது சினிமா டயலாக் இல்லையா என்றும் அது என்ன சிலப்பதிகாரத்தில் இருந்து எடுத்தா பேசினீர்கள் என்றும் கேட்டார். என் கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டிக்கிறீங்கன்னு முதல்வர் பேசியதை சுட்டிக்காட்டி தெரிவித்தார். சட்டம், ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு, பொய் வாக்குறுதி என எதில் உங்கள் கேரக்டரை புரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்டார்.

திமுக ஒரு தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான் எனக்கூறி திமுக ஒரு தீய சக்தி என பலமுறை முழங்கினார் விஜய். தீய சக்திக்கும் தூய சக்தி தமிழக வெற்றி கழகத்திற்கும் இடையே தான் போட்டி என்றும் கூறினார். இங்கிருக்கும் அனைவருக்கும் சொந்த வீடு உள்ளதா என்றும் 207 அரசு பள்ளிகளை மூடியது யார் ஆட்சியில் என்றும் கேட்டார். மக்களுக்காக விஜய் வந்து நிற்பான் என்றும் மக்கள் விஜயுடன் நிற்பார்கள் எனவும் செங்கோட்டையன் நம்முடன் வந்து சேர்ந்துள்ளது பெரிய பலம் என்றும் தெரிவித்தார். 

இதையும் படிங்க: ஈரோடு வரும் விஜய்..!! ஒரே ஒரு ஸ்கூலுக்கு மட்டும் லீவு..!! காரணம் இதுதான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share