×
 

"தமிழ்நாட்டுக்கே பெருமை"..! பைக் ரேசிங் சாதனை... வீராங்கனை ஜெகதீஶ்ரீக்கு கனிமொழி MP வாழ்த்து..!!

சர்வதேச பைக் ரேசிங்கில் சாதித்த சென்னை வீராங்கனை ஜெகதீஸ்ரீக்கு கனிமொழி எம்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையைச் சேர்ந்த முன்னணி இருசக்கர வாகன பந்தய வீராங்கனை ஜெகதீஸ்ரீ குமரேசன், ஆசிய அளவிலான பைக் ரேசிங் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார். விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னையைச் சேர்ந்த ஜெகதீஸ்ரீ, இந்தியாவில் கடந்த இரு ஆண்டுகளாகத் தேசிய அளவிலான பைக் ரேசிங் சாம்பியனாகத் திகழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், Federation of Motor Sports Clubs of India (FMSCI) சார்பில் இந்தியாவுக்காக ஆசிய பந்தயக் களத்தில் போட்டியிடும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. ஆசியாவின் முன்னணி 10 சிறந்த ரைடர்களில் ஒருவராகக் களமிறங்கிய ஜெகதீஸ்ரீ, அந்தப் பந்தயக் களத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாதனை படைத்த முதல் இந்திய வீராங்கனையாகப் பெருமை சேர்த்துள்ளார். 

பைக் ரேசிங் களத்தில் புதிய மைல்கல்லை எட்டியுள்ள ஜெகதீஸ்ரீக்கு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ஜெகதீஶ்ரீக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாத்தியாச்சு..! "கனிமொழி ராஜாத்தி கருணாநிதி"..! தாய் பெயரை சேர்த்த நெகிழ்ச்சி சம்பவம்..!!

தாய்லாந்து நாட்டில் FIM நடத்தும் ஆசிய அளவிலான மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் 3-வது இடம் பிடித்து, தமிழ்நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை ஜெகதிஸ்ரீ குமரேசனுக்கு வாழ்த்துகள் என்று கூறினார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண், மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் ஆசிய அளவில் சாதித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறியுள்ளார். அவர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று, உலக அரங்கில் தமிழ்நாட்டின் பெருமையை உயர்த்திட விழைகிறேன் என்றார். 

இதையும் படிங்க: மு.க.ஸ்டாலின் தலைமையில் மூன்றாவது அணி! காங்கிரசிற்கு ஷாக் கொடுக்கும் கனிமொழி! டெல்லியில் புது கூட்டணி ஆட்டம்?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share