×
 

உச்சக்கட்ட ஷாக்...!! எஸ்.ஐ.ஆர். மூலம் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம்... பகீர் கிளப்பும் அண்ணாமலை...!

தமிழகத்தை பொறுத்தவரை 12 முதல் 13 சதவீதம் வரை SIR மூலம் வாக்காளர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

 எஸ்ஐஆர் பணிகள் விரைவில் முடிவுக்கு வர இருக்கும் நிலையில்,  பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா  12 மாநிலங்களுக்கான கூட்டத்தை கூட்டியுள்ளார். இதில் தமிழக பாஜக சார்பில் எஸ்.ஐ.ஆர். ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலை பங்கேற்கிறார். இதற்காகவும் காசி தமிழ் சங்கத்தில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்னதாக, கோவை விமான நிலையத்தில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், SIR-ல்  80 லட்சம் முதல் ஒரு கோடி வரை வாக்காளர் பட்டியலில் நீக்கம் இருக்கும் என நினைக்கிறோம் என தெரிவித்த அவர், இறந்து போனவர்கள்,குடிபெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் என இருக்கும் பொழுது இந்த அளவு நீக்கம் வர வேண்டும் என தெரிவித்த அவர், டிசம்பர் 11ம் தேதிக்குள் தகவல் வரும், டிசம்பர் 20ம் தேதிக்குள் ஒரு முழுமையான  வடிவம் கிடைக்கும் எனவும் அதன் பின்பு இதில் நிறைய பணிகள் இருக்கும் என தெரிவித்த அவர்,  இது தொடர்பான மீட்டிங்தான் டெல்லியில் நாளை நடக்கிறது எனவும் தெரிவித்தார்.

குறிப்பாக சென்னையில் உள்ள தொகுதிகளில் 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டிய ஓட்டுகள் இருக்கிறது எனவும்,இது தமிழக தேர்தல் களத்தை நிச்சயமாக மாற்றும் எனவும் தெரிவித்தார். ஒரு கோடி வாக்குகள் நீக்கம் என்பது நிச்சயம் 12  முதல் 13 சதவீதம் வரை இருக்கின்றது எனவும், தமிழகத்தில் நீக்கம் 10 சதவீதத்தை தாண்டும் பொழுது இந்த பட்டியலை வைத்து தான் கடந்த தேர்தல்களை சந்தித்தோம் என்பதையும் பார்க்க வேண்டி இருக்கிறது எனவும் தெரிவித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவடைய இன்னும் நேரம் இருக்கிறது, தேர்தல் சூடு இன்னும் இல்லை எனவும்,மிக வலிமையான கூட்டணி அமையும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: புதுச்சேரியில் கால் பதிக்கும் விஜய்... ”இன்னொரு முறை தவறு நடந்தால்”... அண்ணாமலை அதிரடி எச்சரிக்கை...!

காங்கிரஸ் கட்சி எங்க பேசுகிறார்கள், என்ன செய்கின்றார்கள் என தெரியவில்லை எனவும்,
விஜய் இடம் போகிறார்கள், திமுகவிடம் பேசுகின்றார்கள் என்று சொல்கின்றனர் எறக்கூறிய அவர், காங்கிரசை பொருத்தவரை மக்கள் அதை ஒதுக்க ஆரம்பித்து விட்டனர், தமிழகத்தை பொறுத்தவரை  2025-ல் 25 சீட்டுக்கு வந்து விட்டார்கள் எனவும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சிக்கு 35 சீட் கொடுக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டதா? என கூறிய அவர், தோல்வியின் முகமாகத் தான் காங்கிரஸ் இருக்கிறது எனவும்,  தமிழகத்தில் 60 சீட்டில் ஆரம்பித்த காங்கிரஸ் இப்போது 25 சீட்டில் இருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை வர வேண்டியவர்கள் இருக்கிறார்கள், வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது  எனவும், இன்னும் இரண்டு மாத காலம் இருக்கிறது, பக்குவமாக நகர்த்திச் செல்ல வேண்டும் எனவும் இந்த கூட்டணி வெற்றி பெறும்
எனவும் தெரிவித்தார்.
 

இதையும் படிங்க: அமித் ஷா கைக்குப் போன திமுக அமைச்சர்கள் லிஸ்ட்... கிடுகிடுத்துப் போன அறிவாலயம்.... ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share