#BREAKING: தேர்தல் வந்தாச்சு... பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு..! முழு விவரம்..!!
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜக கட்சிக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. 27 பேர் கொண்ட பாஜக வேட்பாளர்கள் பட்டியல். முழு விவரம்;
- சாத்தூர் - நயினார் நாகேந்திரன்
- ஆவடி - அஸ்வின் குமார்
- மயிலாப்பூர் - தமிழிசை சௌந்தரராஜன்
- தளி - நாகேஷ் குமார்
- திருவண்ணாமலை - ஏழுமலை
- கோவை வடக்கு - வானதி சீனிவாசன்
- ராசிபுரம் - பிரேம்குமார்
- மொடக்குறிச்சி - கிருத்திகா சிவகுமார்
- உதகை - போஜராஜன்
- அவிநாசி - எல். முருகன்
- திருப்பூர் தெற்கு - தங்கராஜ்
- திருவாரூர் - கோவி சந்துரு
- தஞ்சாவூர் - முருகானந்தம்
- கந்தர்வகோட்டை - உதயகுமார்
- புதுக்கோட்டை - ராமச்சந்திரன்
- அறந்தாங்கி - கவிதா ஸ்ரீகாந்த்
- விளவங்கோடு - விஜயதாரணி
- திருப்பத்தூர் - திருமாறன்
- மானாமதுரை - பாலகணபதி
- மதுரை தெற்கு - ராம சீனிவாசன்
- ராமநாதபுரம் - நாகேந்திரன்
- நாகர்கோவில் - எம். ஆர். காந்தி
- திருச்செந்தூர் - ராதாகிருஷ்ணன்
- ராதாபுரம் - பாலகிருஷ்ணன்
- வாசுதேவநல்லூர் - ஆனந்தன் அய்யா சாமி
- குளச்சல் - சிவக்குமார்
- பத்மநாபபுரம் - ரமேஷ்
இதையும் படிங்க: உச்சக்கட்ட அதிருப்தி... பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகல்?... டெல்லி தலைமைக்கு பறந்த மெசெஜ்...!