"சீட்டுக்கும் நோட்டுக்கும் செல்லும் விசிக!" - திருமாவை வம்பிழுக்கும் பாஜக...!
திருமாவளவன் எனக்கு மிகச்சிறந்த நண்பர் என்று பாஜக துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
நாமக்கல் அதிமுக மாவட்ட அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் தங்கமணியை பாஜக சேலம் மண்டல பெருங்கோட்ட பொறுப்பாளரும், மாநில துணைத் தலைவருமான கே.பி. ராமலிங்கம்சந்தித்து பேசினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திருமாவனை நான் நேரடியாக சந்திக்க போகிறேன். தனிப்பட்ட முறையில் என்னுடைய நண்பர். தமிழகத்தில் சிலர் ஏற்றுக் கொள்கிறார்களோ? இல்லையோ? தலித் சமுதாய மக்களுக்கு இருக்கக்கூடிய ஒரு அறிவுசார் தலைவராக இருக்கிறார். அந்த இளைஞர்கள் பின்பற்றக்கூடிய ஒரு தலைவர் அவர், தமிழ்நாட்டில் அவரைப் பின்பற்றுகிற இளைஞர்களை திருமா தவறாக வழிநடத்தி விடக்கூடாது.
திமுக நாடாளுமன்ற சீட்டு கொடுத்தார்கள். சட்டமன்றத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள், செலவுக்கு பணம் கொடுத்தார்கள் என்பதற்காக தான் சார்ந்திருக்கிற சமுதாயத்தை தவறாக வழிநடத்தி விடக்கூடாது என்பதை ஒரு நண்பர் என்ற முறையிலே அவரிடம் போய் பல்வேறு விவகாரங்களை நான் பேச வேண்டி இருக்கிறது. அவர் அனுமதித்தால் போக போகிறேன், அவர் அனுமதிப்பார். நான் அவரோடு இருந்து பேசி அவரை திருத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. என்னுடைய நண்பர் மிகப்பெரிய நண்பர் வெளியே தெரியாது. ஆக அந்த நண்பரை தேர்தல் களத்திலே அவர் எந்த மாதிரியான முடிவு எடுத்தாக வேண்டும் என்பதற்காக அவரை எல்லாம் திருத்த வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
திமுக கூட்டணியிலேயே இருந்தால் தனக்கு ஒரு மரியாதை வரும் என்று யாரோ சொல்லி தவறுதலாக அவர் தன்னை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஆக அவருடைய தவறை திருத்தி இந்த அணியிலே சேர்க்கின்ற பொறுப்பை எல்லாம் நாங்க எடுத்தாக வேண்டும். எங்கள் அணிக்கு உள்ளிருந்து ஆதரவு தருகிறாரோ அல்லது வெளியே இருந்து ஆதரவு தருகிறாரோ அது முக்கியமல்ல, திமுகவோடு அவர் இருந்தால் தலித்துக்கு செய்கிற மிகப்பெரிய துரோகம் என்பது அவருக்கு தெரியும். வேறு வழி இல்லாமல் அந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்.
இதையும் படிங்க: மன்னிப்பு கேட்கலன்னா நடக்குறதே வேற... கே. பி. ராமலிங்கத்துக்கு விசிகவினர் பகிரங்க எச்சரிக்கை!
அந்த வேலையைத் தொடர்ந்தால், ஒட்டுமொத்த தலித் சமுதாயம் உங்களால் உங்களுடைய வழிகாட்டினால் ஒரு தவறான பாதைக்கு சென்றுவிடும். சந்திக்க விரும்பினால் நான் சந்திப்பேன் எனக்கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திருமாவை திருத்தப் போகிறேன்..! அந்தக் கூட்டணி சரியில்ல.. கே.பி ராமலிங்கம் பரபரப்பு பேட்டி..!