×
 

மணிப்பூரை பார்... வாய்ச்சவடால் விட்ட முதல்வர்... புள்ளி விவரத்தோடு விளாசிய பாஜக..!!

மணிப்பூர் விவகாரம் குறித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு புள்ளி விவரங்களுடன் தமிழக பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்று முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் பேசியிருந்தார். நயினார் நாகேந்திரன் மற்றும் முதலமைச்சர் இடையே காரசார வாதம் நடைபெற்றது. இந்த நிலையில், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டன என்று சட்டசபையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதை தமிழக பாஜக சுட்டிக்காட்டி உள்ளது.

"மணிப்பூரைப் பார், மத்திய அரசின் தரவைப் பார்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் வாய்ச்சவடால் விட்டதாக தெரிவித்துள்ளது. முதலில், தங்களது திமுக அரசின் காவல்துறை வெளியிட்ட கொள்கை விளக்கக் குறிப்பை உற்றுப் பாருங்கள் என்று கூறியுள்ளது.

கடந்த 2020 உடன் ஒப்பிடும் போது, தங்களது தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்றபின் தான், கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 59.7% ஆக உயர்ந்து, பெண்கள் நடமாட்டத்தையே கேள்விக் குறியாக்கியுள்ளது என்று தெரிவித்து உள்ளது. அதுமட்டுமன்றி, குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும் 125.5% ஆக அதிகரித்து பச்சிளம் குழந்தைகளின் பாதுகாப்பையும் காவு வாங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கேப்டன் ஆன்மா மன்னிக்கவே மன்னிக்காது..!! தேமுதிகவை கடுகடுத்த தமிழக பாஜக..!!

இந்த லட்சணத்தில் வெல்லும் தமிழ்ப் பெண்கள் என மேடையில் நாடகமாடுவது, இந்தியாவிலேயே பாதுகாப்பான மாநிலம் என சட்டமன்றத்தில் மார்தட்டுவது போன்ற பசப்பு வேலைகளில் ஈடுபட வெட்கமாக இல்லையா என்று சாடியுள்ளது. தமிழகப் பெண்களின் பாதுகாப்பைக் குறித்து கடுகளவும் அக்கறையின்றி திசைதிருப்பவதில் மட்டுமே குறியாக இருக்கும் உங்களது போலி முகத்திரை வரும் தேர்தலில் கிழித்தெறியப்படும் என்றும் தமிழகப் பெண்கள் வாழ்வு காக்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: “அம்மா” என அழைத்த பாஜக தொண்டர்கள்... சட்டென சுதாரித்துக் கொண்ட தமிழிசை... என்ன சொன்னாங்க தெரியுமா? 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share