ஆபரேஷன் செந்தூர்; பெண்களுக்கு குங்குமச்சிமிழ் கொடுத்து கொண்டாடிய பாஜக தலைவி!
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். இதனால் காஷ்மீர் எல்லையில் போர் பதற்றம் நிலவியுள்ளது. பஹல்காம் தாக்குதலின் போது 25 பெண்களின் கணவர்கள் கொல்லப்பட்ட நிலையில் அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று 'ஆபரேஷன் சிந்தூர்' என பெயர் வைக்கப்பட்டுள்ளது. சிந்தூர் என இந்தியில் அழைக்கப்படும் சிவப்பு பொட்டை இழந்த பெண்களுக்கு நீதி கிடைப்பதற்காக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் சுற்றுலா சென்ற இந்து பெண்களின் கணவர்களை கொன்று அதை பெருமையாக உங்கள் பாரத பிரதமரிடம் போய் சொல்லுங்கள் என்று திமிராக பேசிய பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளை அவர்கள் சொந்த மண்ணில் வைத்தே இந்திய ராணுவம் தரைமட்டமாக்கியது.
இதையும் படிங்க: போர் பதற்றம்.. தன்னை சந்திக்க வர வேண்டாம்..! கழகத் தொண்டர்களுக்கு இபிஎஸ் அன்பு கட்டளை..!
பயங்கரவாதிகளால் குங்குமத்தை இழந்த இந்திய பெண்களுக்கு நீதி பெற்றுத்தரும் வகையில் பாகிஸ்தான் மீதான துல்லிய தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பிரதமர் மோடி பெயரிட்டிருந்தார். ஆபரேஷன் சிந்தூர் வெற்றி பெற்றதை இந்தியாவில் மூலை முடுக்கெங்கும் உள்ள மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் அரியலூரில் பாஜக சார்பில் பெண்களுக்கு குங்குமச்சிமிழ் வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். பாரத பிரதமரின் துணிச்சலான முடிவை பாராட்டும் வகையிலும், மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாகவும் பாஜக அரியலூர் மாவட்ட தலைவர் டாக்டர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் அப்பகுதி பெண்களுக்கு குங்குமச்சிமிழ் வழங்கியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியா -பாக்., பதற்றம்..! வாயடைத்துப் போன வங்கதேசம்..! இந்து மக்களுக்காக அதிரடி உத்தரவு..!