அச்சச்சோ!! அண்ணாமலைக்கு என்னாச்சு... வீட்டிற்குள் முடங்க இதுதான் காரணமா?
இதுதொடர்பாக பாஜ பெயரை பயன்படுத்தாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட விளக்க அறிக்கையில் பல பொய்யான தகவல்களை கூறியிருப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.
பாஜ முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை மாவட்டத்தில் இக்கரை போளுவாம்பட்டியில் ரூ.80 கோடி நிலத்தை வெறும் ரூ.4.5 கோடிக்கு அடிமாட்டு விலைக்கு அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப் அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் வாங்கி மனைவி பெயரில் பதிவு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேபோல அண்ணாமலை தனது மனைவி அகிலா பெயரில் 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் பகுதியில் 1.2 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கிய தகவலும் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தன.
மாற்றுக்கட்சியினர் மட்டுமின்றி பாஜவினர் பலர் அண்ணாமலையை விமர்சித்தும், சொத்து வாங்க எங்கிருந்து பணம் வந்தது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இது தொடர் தொடர்பாக பாஜ பெயரை பயன்படுத்தாமல் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெயரில் அண்ணாமலை வெளியிட்ட விளக்க அறிக்கையில் பல பொய்யான தகவல்களை கூறியிருப்பதாக விளக்கம் அளித்திருந்தார்.
இதையும் படிங்க: என்ன ஆச்சு அண்ணாமலைக்கு? இதுக்கு கூட வரலையாம்... BJP தலைகள் குழப்பம்..!
இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஜூலை 12-ம் தேதி விவசாய நிலம் வாங்கியது உண்மைதான் என ஒப்புக்கொண்ட அண்ணாமலை, அதை எனது மற்றும் என் மனைவியின் சேமிப்பு, கடன் ஆகியவற்றில் இருந்து வாங்கினேன். கடந்த இரண்டு மாதங்களாக என் வங்கிக் கணக்கு மூலம், அந்த கடனுக்கான மாதாந்திர வட்டியை செலுத்தி வருகிறேன். மனைவி அகிலாவுக்கு பவர் ஆஃப் அட்டர்னி கொடுத்ததால் பத்திரப்பதிவுக்கு நான் செல்லவில்லை எனக்குறிப்பிட்டிருந்தார். பத்திரப் பதிவு, முத்திரைத் தாள், இதர கட்டணமாக ரூ.40 லட்சத்து 59,220 செலுத்தி உள்ளேன். மத்திய அரசின் பிஎம்இஜிபி திட்டத்தின்கீழ், பால்பண்ணை அமைப்பதற்கான கடனுக்கு விண்ணப்பித்துள்ளேன் என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், அண்ணாமலை மீது சொந்தக்காரர்கள் சிலரே குறிவைத்து விமர்சனங்களைக் கொட்டி வருவது கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அண்ணாமலை காய்ச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மருத்துவர்கள் அறிவுரைப்படி சென்னையில் உள்ள வீட்டில் அவர் ஓய்வெடுத்து வருகிறார். அண்ணாமலை உடல் நலம் பெற்று மீண்டு வர வேண்டுமென அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நயினார் தலைமையை ஏற்க மறுக்கும் அண்ணாமலை... பாஜகவுக்குள் நடப்பதை புட்டு, புட்டு வைத்த திருமா...!