குறிச்சி வச்சிக்கோங்க... இன்னையோட இதை நிறுத்தலைன்னா பின்விளைவுகள் பெருசா இருக்கும்... தமிழக அரசை எச்சரித்த எச்.ராஜா...!
பூரண சந்திரனின் தியாகத்தை கொச்சைப்படுத்த வேண்டாம். முஸ்லிம்கள் சென்று கொடியேற்றலாம் என்றால் 21 நாட்களாக காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ஏன் யாரையும் அனுமதிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்ற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட திருப்பரங்குன்றம் பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் திருநகர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் அவர்களை பாஜக முகூர்த்த தலைவர் எச்.ராஜா நேரடியாக வந்து அவர்களை சந்தித்தார். தொடர்ந்து வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: அமைதியாக உள்ளூரில் உள்ள இந்துக்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கைது செய்யப்பட்டிருப்பார்கள் 6:30மணிக்குள் நிபந்தனை இன்றி வெளியிடப்பட வேண்டும். சந்தனக்கூடு நிகழ்விற்கு உள்ளூர் அடையாள அட்டை இல்லாதவர்கள் யாரும் அனுமதிக்கப்படக்கூடாது. உள்ளூரில் அனுமதிக்காமல் காவல்துறை இந்து விரோத செயல்பாடு கண்டிக்கத்தக்கது.
இந்து விரோத, முருகன் விரோத, ஸ்டாலின் அரசின் இந்து விரோத நடவடிக்கை மூலமாக நம்மளை இந்துக்கள் முஸ்லிம்கள் என்று பேச வைத்திருக்கிறார்கள். முகமதியர்கள் உரிமை கொண்டாடும் கட்டடமும் அங்கு இருக்கும் 33 செண்டுகள் தான் அவர்களுக்கு உரிமையானது. மீதமுள்ள மொத்த மலையும் திருப்பரங்குன்றம் கோவிலுக்கு சொந்தம்.
தமிழக சுற்றுலாத் துறையின் கையீட்டில் தற்காவை சொந்தம் கொண்டாடுவதே தேச விரோதம் தான். சிக்கந்தர் பாதுஷாவே ஆப்கான் நாட்டை சேர்ந்தவர். இந்த தர்கா இருக்கும் 33 சென்ட்க்கு வெளியில் இருக்கும் முருகன் கோவில் தளம் இருப்பதுதான் கள்ளத்தி மரம் அங்கு அவர்கள் கொடி எப்படி இருக்கலாம். அந்தக் கொடி அங்கிருந்து அகற்றப்பட வேண்டும். கள்ளத்தி மரம் முருகப்பெருமானின் தலவிருட்சம் அது ஆக்கிரமிப்பு. 33 சென்ட் வெளியில் யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பது பிரிவியூ கவுன்சில் தீர்ப்பு. அடுத்ததாக உள்ள இருக்கும் மக்களின் கோரிக்கை நாங்கள் இரண்டு பெண்கள் சென்று தீபத்தூணில் தீபம் ஏற்றுகிறோம். அரசாங்கம் சொல்லும் காரணத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது ஏனென்றால் எப்ப மலையும் கோவிலுக்கு சொந்தமானது.
இதையும் படிங்க: ஊட்டிக்கு போறீங்களா..?? டால்பின் நோஸ் இன்று திறப்பு..!! சுற்றுலாப் பயணிகள் ஹேப்பி..!!
முஸ்லிம்கள் அங்கு சென்று சந்தனக்கூடு நடத்தலாம் என்றால் 21 நாட்களாக காசி விஸ்வநாதர் கோயிலுக்கு இந்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. நாளை முதல் இந்துக்கள் காசி விஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய எந்த தடையும் இருக்கக் கூடாது. அப்படி இல்லை என்றால் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு செல்வதற்கான வேலைகளை பாஜக செய்யும். 6:30 மணிக்குள் இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். இல்லையென்றால் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபடுவார்கள் அதனால் வருகின்ற பின் விளைவுகள் அனைத்திற்கும் உள்ளூர் நிர்வாகம் தான் பொறுப்பு.
யாரும் பூரண சந்திரனைப் போன்ற முடிவுக்கு வர வேண்டாம். 1530இல் இருந்து ராமர் கோவில் அன்னியப் படையெடுப்பாளன் பாபரால் இடிக்கப்பட்டது. ஆனால் அங்கு மீண்டும் கோவில் கட்டப்பட்டு, மசூதி கட்டப்பட்டது. ஆனால் அங்கு யாருக்கும் வந்து சென்று நமாஸ் செய்ய துணிச்சல் வரவில்லை. அதனால் நாம் 500 ஆண்டு போராடி அதை பெற்றிருக்கிறோம். அதனால் இந்துக்கள் யாரும் அந்த முடிவுக்கு செல்ல வேண்டாம்.
இதையும் படிங்க: “சட்டையைக் கழட்டிடுவேன்... நீயெல்லாம் எனக்கு எம்மாத்திரம்”... காட்பாடி டிஎஸ்பியை பகிரங்கமாக எச்சரித்த வேல்முருகன்...!