×
 

சி.எம்.விஜய் டு செங்கோட்டையன் வரை... முக்கிய பாயிண்ட்டை பிடித்து தவெகவை விளாசிய நயினார் நாகேந்திரன்...!

அமைச்சர் செங்கோட்டையன் எப்பொழுதுமே மாற்றி மாற்றி பேசுவார்: தற்போதைய அரசியல் ஸ்டூடியோ விற்குள் நடக்கும் அரசியல்

நெல்லையில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:  மறைந்த இயக்குனர் பாரதிராஜா இரங்கல் செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். பாஜக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சின்ன வீடு, டார்லிங் டார்லிங், முந்தானை முடிச்சு போன்ற வெற்றி படங்கள் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலைத்துறையின் முக்கிய வாரிசு இறந்துவிட்டார். 

தற்போது நடக்கும் அரசியல் ஸ்டூடியோ விற்குள் நடக்கும் அரசியல். மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கையில் போன் வைத்துக் கொண்டு டேப்லெட்டை பொடியாக்கி கசக்கி சாப்பிடும் வகையிலான செயல்பாடுகளில் ஈடுபடுவதாகும். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. 

சிங்கப்படை மூலம் பெண்களை பாதுகாப்போம் என்று கூறிய அரசு 17 வயது முதல் 80 வயது வரையிலான பெண்களுக்கு எதிராக தொடர்ச்சியாக நடக்கும் அநீதிகளை வேடிக்கை பார்க்கிறது. 

இதையும் படிங்க: “எந்த அப்பாவைக் காணவில்லை...” - திமுகவை சீண்டிய விஜய்க்கு நயினார் நாகேந்திரன் தரமான பதிலடி...!

அறநிலையத்துறை சார்பில் பள்ளி வளாகங்களில் வணிக ரீதியாக கடைகள் கட்டப்பட்டுள்ளது மல்டி பார்க்கிங் போன்ற திட்டங்களையும் செய்யாமல் இருக்கின்றனர். 

சட்டப்பேரவையில் அமைச்சர்கள் செய்யும் செயல்பாடுகள் எதிர்க்கட்சிகளை நடத்தும் விதம் வஞ்சனையுடன் பேசுவதை ஏற்க முடியாது. ஆதாரமில்லாமல் பேசும் அமைச்சர்கள் மற்றும் அரசு நிர்வாகத்தை பாஜக தொடர்ந்து கண்காணிக்கும். 


வருகின்ற தேர்தலில் பாஜக தனது பலத்தை நிரூபிக்கும். தேர்தல் குறித்து போட்டியிடுவது மற்றும் கூட்டணி குறித்த முடிவுகளை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் தலைமை முடிவெடுக்கும். 

தமிழகத்தின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக பலரை நியமிக்காமல் ஜனநாயக படத்தின் தயாரிப்பாளர் நியமித்திருப்பது தவறு. 

அரசு பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் மட்டும் டிக்கெட்டை வாங்கினால் மற்றவர்கள் டிக்கெட் வாங்கவில்லை ஒரு முதலமைச்சருக்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அவரது உதவியாளர் ஆகிய இருவரும் அரசு பேருந்தில் பயணம் செய்தால் டிக்கெட் வாங்க வேண்டும் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. இந்த அரசு செயல்பாடு இல்லாத அரசாங்கம். 

செங்கோட்டையன் ஏதோ தேவையில்லாத விஷயங்களை குறித்து பேசி வருகிறார். அவர் எப்பொழுதுமே மாற்றி மாற்றி பேசக்கூடியவர் என்று கூறினார். 
 

இதையும் படிங்க: "கையாலாகாத காங்கிரசிடம் உயர்கல்வித் துறை"..! குத்தாட்டம் போடும் அமைச்சர்..! விளாசிய நயினார்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share