விஜய் டெல்லி விசிட் பின்னணி இதுதானா? - ஆந்திர பாஜகவின் அரசியல் புள்ளி சொன்ன முக்கிய தகவல்...!
தற்போது அனைத்து யுகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் ஆந்திர மாநில பாஜக துணை தலைவர் முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்குள் தவெகவை கொண்டு வர அமித் ஷா பல கட்ட காய்களை நகர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் மற்றொருபுறம் தவெக எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்காது, தனித்து போட்டியிடவே விஜய் திட்டமிட்டுள்ளார் என்ற தகவல்களும் வெளியாகி வருகிறது. சரி, விஜய் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பிடிக்கிறாரா? என அந்த கூட்டணியில் உள்ள தலைவர்களிடம் கேள்வி எழுப்பினால், ,“திமுகவை வீழ்த்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்”, “தவெக NDA கூட்டணிக்குள் இணைந்தால் வரவேற்போம்” என பொதுவான பதில்களே கிடைத்து வந்தன.
மேலும் இன்று டெல்லி செல்லும் விஜய், மாலை பாஜக முக்கிய தலைவர்களுடன் கூட்டணி தொடர்பாக ரகசிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார் என்ற செய்திகளும் காலை முதலே அரசியல் களத்தை சூடாக்கி வருகிறது. இவை அனைத்தும் உண்மையா? வெறும் யுகங்களா? என மக்கள் குழம்பி வந்த நிலையில், தற்போது அனைத்து யுகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பது போல் ஆந்திர மாநில பாஜக துணை தலைவர் முக்கிய தகவல் ஒன்றைத் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜயை இணைப்பது குறித்து மாநில, தேசிய தலைவர்கள் பேசி கொண்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஆந்திர மாநில பாஜக துணை தலைவருமான காப்பு ராமசந்திர ரெட்டி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் தவெக?... இன்று மாலை டெல்லி பறக்கும் விஜய்... பாஜக தலைவர்களுடன் சந்திப்பு?
திருவள்ளூர் அடுத்த நுங்கம்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கூட்டணி கட்சிகளுடன் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளுர் மாவட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளரும் ஆந்திர மாநில பாஜக துணை தலைவருமான காப்பு ராமச்சந்திர ரெட்டி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து கூட்டணி கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பதாகவும், விஜயை தேசிய ஜனநாயக கூட்டணியில் கொண்டுவர மாநில தேசிய தலைமை தலைவர்கள் பேசிக்கொண்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்,
திமுக மீது மக்கள் கோபமாக உள்ளனர் எனவும், திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராக உள்ளதாகவும், NDA கூட்டணி வெற்றி பெறுவது உறுதி எனவும், வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் எனவும், திருவள்ளூரில் NDA கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: “விஜய் கூட இருக்குறது எல்லாமே பீடைங்க... சனியன் சகடை , பான் பராக் ரவி...” - தவெகவை கிழித்து தொங்கவிட்ட பி.டி. செல்வகுமார்...!