பாஜகவில் இருந்து அடுத்த முக்கிய புள்ளியைத் தட்டித்தூக்கிய அண்ணாமலை... டெல்லிக்கு பறந்த கடிதம்...!
தயவுசெய்து எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, கட்சியுடன் தொடர்புடைய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
பாஜக மாநில செயலாளர் முரளி(எ)ரகுராமன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட கட்சி பொறுப்புகளில் இருந்து விலகல். அண்ணாமலை புதிதாக தொடங்கவுள்ள கட்சியில் இணையவுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் முரளி(எ)ரகுராமன். அதிமுகவில் இருந்த இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவி.சண்முகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அன்றைய பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை முன்னிலையில் பாஜவில் இணைந்தார்.
இந்நிலையில் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ள நிலையில் முரளி(எ)ரகுராமன் பாஜக மாநில செயலாளர் பொறுப்பு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: இருளில் மூழ்கிய குமரி திருவள்ளுவர் சிலை..! தவெக அரசின் சாதனை..? வலுக்கும் கண்டனம்.!!
அதனைத் தொடர்ந்து அண்ணாமலை புதிதாக தொடங்க உள்ள கட்சியில் முரளி என்கிற ரகுராமன் இணையவுள்ளார்.
இது தொடர்பாக கட்சி தலைமைக்கு அவர் அனுப்பிய கடிதத்தில், மரியாதையுடனும் நன்றியுடனும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளர் (விழுப்புரம்) பதவியிலிருந்தும், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் எனது ராஜினாமாவை சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
எனது முடிவைப் பாதித்த சில கடினமான அனுபவங்களைப் பற்றி நான் அதிகம் பேச விரும்பவில்லை என்றாலும், நான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என்ற முடிவுக்கு அவை என்னை இட்டுச் சென்றுள்ளன
தமிழ்நாட்டில் கட்சியின் தற்போதைய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டும், மாண்புமிகு பிரதமர் மோடி மீது எனக்குள்ள தொடர்ச்சியான மரியாதை மற்றும் போற்றுதலுடனும், கனத்த இதயத்துடன் இந்த ராஜினாமாவைச் சமர்ப்பிக்கிறேன்.
தயவுசெய்து எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, கட்சியுடன் தொடர்புடைய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் என்னை விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "விஜய் எனும் பொம்மையை பாருங்க"... இது "துரோக சக்தி"..! நயினார் சரமாரி விளாசல்..!!