×
 

பாஜகவுக்கு எத்தனை தொகுதிகள்? டெல்லி செல்லும் நயினார் இபிஎஸ் உடன் திடீர் சந்திப்பு...!

கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க எடப்பாடி பழனிச்சாமியை நயனார் நாகேந்திரன் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் சட்டமன்ற பொது தேர்தல்கள் நடைபெற இருக்கின்றன. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை மும்முறமாக செய்து வருகின்றன. மக்கள் சந்திப்பு, பொதுக் கூட்டங்கள், செயற்குழு கூட்டங்கள் என முனைப்பு காட்டி வருகின்றன.

கட்சியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. 2026 ஆம் ஆண்டு ஆட்சி அரியணையில் ஏறுவதை உறுதி செய்வதற்காக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளன. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமையுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு நடத்தினார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் நயினார் நாகேந்திரன் சந்தித்து உள்ளார். தேர்தல் கூட்டணி தொகுதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு நாட்களில் நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி உடன் சந்திப்பு நடத்தி இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. நேற்றைய தினம் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் கூட்டணி குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு முழு அதிகாரம் வழங்கப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படிங்க: அதிமுகவினர் கவனத்திற்கு..! ELECTION- ல போட்டியிடனுமா? விருப்ப மனுக்கள் தொடர்பாக இபிஎஸ் முக்கிய அறிவிப்பு...!

இந்த நிலையில் ஐயனார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்துள்ளார். தமிழகத்தில் தேர்தல் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது, என்னென்ன முன்னெடுப்புகள் நடைபெற்று வருகின்றன, எதிர்வரும் காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கை என பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் எண்ணிக்கை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: பயத்தை போக்க இபிஎஸ் போட்ட மேக்கப் தான் பொதுக்குழு கூட்டம்... R.S பாரதி விமர்சனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share