×
 
☰

அதளபாதாளத்தில் வருவாய்... படுகுழியில் தள்ளிய விஜய் அரசு... நயினார் குற்றச்சாட்டு..!!

GST வருவாயை குறிப்பிட்டு தமிழக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சித்து உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலத்தின் ஜி.எஸ்.டி வருவாய் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். தமிழ்நாட்டைப் பொருளாதாரப் படுகுழியில் தள்ளிவிட்ட ஜோசப் விஜய் அரசுக்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஜி.எஸ்.டி வரி வசூல் புள்ளிவிவரங்களே உண்மையை அப்பட்டமாக வெளிப்படுத்திவிட்டன என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். வெற்றுப் பேச்சுக்களாலும் சமூக வலைதளப் புகழ்ச்சிகளாலும் ஒரு மாநிலத்தின் ஆட்சியை நடத்திவிட முடியாது என்பதை இந்தப் புள்ளிவிவரங்கள் நிரூபித்துள்ளன.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில், இந்த 2026ஆம் ஆண்டின் கடந்த மூன்று மாதங்களாகவே தமிழ்நாடு தொடர்ந்து வரி வருவாய் வீழ்ச்சியையே சந்தித்து வருகிறது. ஜூலையில் ஒரு சதவீதமும், ஆகஸ்டில் ஒரு சதவீதமும், செப்டம்பரில் ஐந்து சதவீதமும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதற்கு நேர்மாறாக உத்தரப் பிரதேசம் 18 சதவீதமும், குஜராத் 17 சதவீதமும், கர்நாடகா 16 சதவீதமும், மகாராஷ்டிரா 15 சதவீதமும் கடந்த ஆண்டை விட அபார வளர்ச்சி கண்டு வருகின்றன. இத்தகைய நிலையில் தவெக ஆட்சியில் தமிழ்நாடு மட்டும் தொடர்ச்சியாக மூன்று மாதங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து அதலபாதாளத்திற்குச் சரிந்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

தொழில்துறையையும் வர்த்தகத்தையும் வழிநடத்தத் தெரியாத முதல்வர் விஜயின் அனுபவமின்மையே இந்தத் தொடர் ஜி.எஸ்.டி வீழ்ச்சிக்கு நேரடிக் காரணம் என்று நயினார் நாகேந்திரன் சுட்டிக்காட்டினார். அரசுக்கு வருமானத்தை ஈட்டவும், நிதி நிர்வாகத்தைச் சரியாகக் கையாளவும் திறனில்லாத நிலையில், கவர்ச்சி அறிவிப்புகளையும் சினிமாப் பாணி விளம்பரங்களையும் காட்டி மக்களை ஏமாற்றி வருகிறார் முதலமைச்சர் ஜோசப் விஜய். தமிழ்நாட்டின் நிதி ஆதாரத்தையே முடக்கிப்போடும் இந்த மோசமான ஆட்சியை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: முதல்வர் விஜய்க்கு தடுமாற்றம் வந்துள்ளது! தாராபுரம் பேச்சு குறித்து நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

மாநிலப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்திய தவெக அரசு, தொடர்ந்து மூன்று மாதங்களாக ஜி.எஸ்.டி வருவாய் வீழ்ச்சியடைந்ததற்கான காரணங்களை உடனடியாக வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்தார். வெற்று முழக்கங்களால் நிதி நெருக்கடியை இனியும் மறைக்க முடியாது. முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக நிதி நிர்வாகத்தைச் சீரமைக்காவிட்டால், இந்தச் சீர்கேட்டிற்கு மக்கள் மன்றத்தில் தவெக அரசு கடுமையான பாடத்தைக் கற்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.

 

இதையும் படிங்க: தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா.? நயினார் நாகேந்திரன் கண்டனம்.!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share