×
 

வரலாற்றை திரித்த அமைச்சர் கீர்த்தனா.! வாஜ்பாயை அசிங்கப்படுத்துவதா.? நயினார் கண்டனம்.!!

அமைச்சர் கீர்த்தனா பேசியதை சுட்டிக்காட்டி நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனாவின் சட்டமன்றப் பேச்சைக் கடுமையாகக் கண்டித்துள்ளார். வரலாற்றைத் திரித்து முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மாண்பைக் கொச்சைப்படுத்துவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையைச் சேர்ந்த அன்னை சின்னப்பிள்ளை அவர்கள், ‘களஞ்சியம்’ சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவர்.

அவரது உன்னதப் பணியைப் பாராட்டி, அன்றைய பிரதமர் பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய், 2001ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ‘ஸ்த்ரீ சக்தி’ விருது வழங்கும் மேடையில் அன்னை சின்னப்பிள்ளை காலில் விழுந்து வணங்கிக் கௌரவித்தார். இது இந்தியாவே வியந்த ஒரு பண்பாட்டுத் தருணம் என நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டார். ஆனால், நேற்று சட்டமன்றத்தில் பேசிய அமைச்சர் கீர்த்தனா, சின்னப்பிள்ளை ஹைட்ராலிக் அமைப்பில் ஆயில் கசியாமல் இருக்க ‘ஓ-ரிங்’ கண்டுபிடித்தார் என்றும், அதற்காக முன்னாள் பிரதமர் வாஜ்பாய், சின்னபொண்ணு வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் ஒரு கற்பனைக் கதையைக் கூறியுள்ளார்.

வாஜ்பாய் மற்றும் சின்னப்பிள்ளை ஆகியோர் குறித்து அவர் கூறியுள்ள தகவல்கள் நகைப்பிற்குரியவை மட்டுமல்ல, கடும் கண்டனத்திற்குரியவை என நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். இந்நிலையில், நேற்று சட்டமன்றத்தில் ஒரு தவறான தகவலைப் பதிவு செய்துவிட்டு, அது சமூக வலைதளங்களில் அம்பலமானவுடன், “நேரம் கருதி சுருக்கமாகச் சொன்னேன்” என்று அமைச்சர் அளித்துள்ள விளக்கம், “முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும்” முயற்சியாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதையும் படிங்க: சென்னைக்கு வெள்ள அபாயம்... பரந்தூர் ஏர்போர்ட்டால் பெரும் ஆபத்து..! அமைச்சர் கீர்த்தனா எச்சரிக்கை.!!

எனவே, சின்னப்பிள்ளை வரலாறு மற்றும் வாஜ்பாய் மாண்பு குறித்துத் தனது முந்தைய பேச்சில் இருந்த பிழைகளை வெளிப்படையாக சபையில் ஒப்புக்கொண்டு, தவறான தகவல்களைப் பதிவு செய்த அமைச்சர் கீர்த்தனா உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும். இனி இதுபோல் ஆதாரமற்ற தகவல்களை வழங்குவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: அநாகரிக விமர்சனம்..! ஆடை விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவுக்கு கனிமொழி எம்பி சப்போர்ட்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share