×
 

ஓபிஎஸுக்கு துணை முதல்வர் பதவி... பாஜகவின் திடீர் கரிசனம்... பதில் சொல்வாரா ஸ்டாலின்...!

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் தி.மு.க வில் இணைந்தது ஒருநாள் பேப்பர் செய்தி மூன்று முறை முதல்வராக இருந்தவருக்கு ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கொடுப்பாரா?

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சின்னஓவுலாபுரத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் 13 ஆண்டுகால சிறப்புகளை பற்றி மக்களுக்கு எடுத்து கூறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தேனி மாவட்டம் சின்னமனூரில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அவர் கூறியது கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக பாரத பிரதமர் மதுரைக்கு வருகை தந்தார் அப்பொழுது அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மோடி போவியா தொற்றிக் கொண்டது.மோடி அவர்கள் எழுப்பிய எந்த ஒரு கேள்விக்கும் திமுக தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு பதிலும் தெரிவித்தது கிடையாது.

இதுவரை 48 ஆயிரம் கோடி ஊழல் சம்பந்தமாக கேள்வி எழுப்பப்பட்டுள்ளது அதில் 40 ஆயிரம் கோடி டாஸ்மார்க் ஊழல் எந்த பதிலும் இதுவரைக்கும் தெரிவிக்கவில்லை. தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது இரண்டு வயது குழந்தை முதல் பாலியல் துன்பம் செய்துள்ளார்கள், அவர்கள் யார் என்று விசாரித்தால் திமுக நிர்வாகியாக உள்ளனர். பச்ச குழந்தை முதல் பல்கலைக்கழகம் வரை பாலியல் துன்புறுத்தல் நடைபெற்று வருகிறது. தரையில் சென்றால் கஷ்டம் என்று விமானத்தில் சென்றாலும் விமானத்தில் பாலியல் துன்பங்களை திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: “ஒட்டடையடிக்க உதவாத விளக்குமாறு...”, “இதுக்கு நாக்கை பிடுங்கி செத்திருக்கலாம்”... ஓபிஎஸை ஒருமையில் விளாசித் தள்ளிய விந்தியா....!

ஓபிஎஸ் அவர்கள் திமுகவில் இணைந்தது ஒரு நாள் பேப்பர் செய்தி மட்டுமே அவருக்கு சொந்த மாவட்டத்திலே மதிப்பு கிடையாது அவர் கட்சியில் சேர்ந்தால் அனைவரும் திமுகவில் இணைந்து விடுவார்களா? யாரும் இணைய மாட்டார்கள். ஓபிஎஸ் தற்போது கட்சியில் சேர்ந்திருப்பது செல்லாத 1000 நோட்டை போன்றது எதற்கும் பயனாக இருக்காது.

மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓபிஎஸ் அவருக்கு திமுக ஸ்டாலின் துணை முதல்வர் பதவி அளிப்பாரா என கேட்டு சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார் பாரதிய ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன்.

இதையும் படிங்க: கன்ஃபார்ம்..!! அதிமுக கூட்டணி படுதோல்வி அடையும்... OPS திட்டவட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share