திமுகவை கடுப்பேத்தும் பாஜகவின் ‘சூப்பர் பிளான்’! டெல்லி வரை பறக்கும் ரிப்போர்ட்! “மாஸ்டர் ஸ்ட்ரோக்”!
'விளிம்பு நிலையில் உள்ள மக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய வேண்டும்' என தமிழக பா.ஜ., வினருக்கு, கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை மனசில் வைத்து தமிழக பாஜக புதிய “மாஸ்டர் ஸ்ட்ரோக்” போட்டிருக்கிறது. கட்சியின் மாநிலத் தலைமை அனைத்து நிர்வாகிகளுக்கும் ஒரே ஒரு உத்தரவை போட்டிருக்கிறது: “உங்கள் பகுதியில் உள்ள தூய்மைத் தொழிலாளர்கள், மீனவர்கள், தெருவோர வியாபாரிகள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களை வீடு வீடாகச் சென்று சந்தியுங்கள். அவர்களின் குறைகளைக் கேளுங்கள். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகளை உடனே செய்து கொடுங்கள். இதை மாதம் மாதம் அறிக்கையாக தலைமைக்கு அனுப்புங்கள்!” என உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜக மாநில நிர்வாகி ஒருவர் நம்மிடம் பேசுகையில், “திமுக அரசு தூய்மைத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை மூன்று வருஷமாக கண்டுகொள்ளவே இல்லை. ‘மூன்று வேளை உணவு’னு கண்துடைப்பு திட்டம் போடுறாங்க. ஆனா உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை. அதே நேரத்தில் மோடி அரசு வங்கிகள் மூலம் கடன் உதவி, முத்ரா லோன், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற பல திட்டங்களை கொண்டு வந்திருக்கு.
இதை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனால்தான் இப்போது எல்லா பாஜகவினரும் வீடு வீடாகச் சென்று விளிம்பு நிலை மக்களைச் சந்திக்க வேண்டும் என்று தலைமை உத்தரவு போட்டிருக்கு” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி நரகாசுரனா? வன்மம், வன்முறையை வெளிப்படுத்தும் திமுக.. நயினார் ஆவேசம்!
மேலும் அவர், “இது தேர்தல் ஸ்டண்ட் இல்லை. உண்மையாகவே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதற்கென தனி டீம்களை அமைத்திருக்கிறோம். மாதம் மாதம் எத்தனை பேரை சந்தித்தோம், எத்தனை பேருக்கு உதவி செய்தோம் என ரிப்போர்ட் கேட்கப்படும். இதன் மூலம் திமுகவின் பொய் பிரச்சாரங்களை முறியடித்து, மக்களிடம் பாஜகவின் உண்மை முகத்தைக் காட்டப் போகிறோம்” என்று உற்சாகமாகச் சொன்னார்.
தமிழகத்தில் இதுவரை “நகர்ப்புற இளைஞர்கள், பெண்கள்” என்று மட்டுமே பாஜக பேசியது. இப்போது திடீரென தூய்மைத் தொழிலாளர்கள், மீனவர்கள், தெரு வியாபாரிகள் என்று சமூகத்தின் கீழ் தட்டு மக்களை நேரடியாகச் சென்று சந்திக்கும் இந்த புதிய திட்டம், திமுகவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. “மோடி அரசு கொடுத்த உதவிகளை நேரடியாக மக்களிடம் சொல்லி, 2026-ல் பாஜகவுக்கு புதிய வாக்கு வங்கியை உருவாக்கும் மாஸ்டர் பிளான் இது” என்று பாஜகவினர் கொண்டாட்ட மூடில் இருக்கிறார்கள்.
திமுகவோ இதை “தேர்தல் ஸ்டண்ட்” என்று ஒதுக்கி வருகிறது. ஆனால் பாஜகவின் இந்த “வீடு வீடாக உதவி” திட்டம் உண்மையிலேயே களத்தில் இறங்கினால், அடுத்த தேர்தலில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம் என்பது விரைவில் தெரிந்துவிடும்!
இதையும் படிங்க: இவங்களுக்கு என்ன தகுதி இருக்கு?! அனுபவம் இல்லாதவர்கள் பொறுப்பாளர்களா? பா.ஜ., தலைவர்கள் கொந்தளிப்பு!