சிங்கப் பெண் படை சுறுசுறுப்பா இருக்கணும்..! நகைக்காக 60 வயது பெண் கொலை... வானதி சீனிவாசன் கண்டனம்..!
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
தேனியில் இன்று அதிகாலை ஒரு கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. வீட்டில் தனியாக வசித்து வந்த 60 வயது ராதா என்ற மூதாட்டி, அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கழுத்து மற்றும் வாய் பகுதியை கயிற்றால் இறுக்கிக் கொலை செய்யப்பட்டார். அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்குப் பிறகு அவர் அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் வீட்டில் இருந்த சுமார் 28 லட்சம் ரூபாய் பணம் காணாமல் போனதாக கூறப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், தேனி நகர் பகுதியில் இன்று அதிகாலை 60 வயது பெண் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டு, அவரது வீட்டில் இருந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாகக் கூறப்படும் செய்தி மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என பாஜக முன்னாள் MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில்கூட தனியாக வீட்டில் வசிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து கவலைகள் எழுந்தன. ஆனால் தற்போதைய தவெக ஆட்சியிலோ குற்றச் சம்பவங்கள் ஒருபடி மேலே சென்று தனியாக வசிக்கும் முதியவர்களை கொலை செய்து பணம், நகைகளைத் திருடும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது என கூறினார். விஜய் ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்தபோதும், மாற்றாக தொடர்ந்து குற்றங்கள் பெருகி வருவதே நிஜம் என கூறினார். பொதுவாக சிங்கங்கள் அதிக நேரம் தூங்கும் இயல்புடையவை.
இதையும் படிங்க: முதியவரை தாக்கிய தவெக நிர்வாகி..! காட்டுமிராண்டித் தனம்... விளாசிய வானதி சீனிவாசன்..!!
பசித்தால் மட்டுமே இரை தேடும் என்றும் அதுபோலத்தான் பெண்களின் பாதுகாப்பிற்காக ஆரம்பித்து வைத்த சிங்கப் பெண் படையும் கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறது போலும் எனவும் தெரிவித்தார். கணக்கு காட்ட வேண்டுமே என்பதற்காக அங்கொன்றும் இங்கொன்றுமாக வழக்குகளைப் பதிந்து “நாங்களும் இருக்கிறோம்” என்று காட்டிக்கொள்ளும் அளவில்தான் அவர்களின் செயல்பாடு உள்ளதாகத் தெரிகிறது. எனவே சிங்கப் பெண் படையை முழுவீச்சில் களமிறக்கி, சுறுசுறுப்புடன் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்து குற்றங்களைத் தடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் அரசு வேலை..! விஜய் அரசுக்கு வானதி சீனிவாசன் டிமாண்ட்..!!