×
 

அதிக தொகுதிகளில் பாஜக... போட்டி பலமா இருக்கும்..! கட்சி நிர்வாகிகளுக்கு பி.எல். சந்தோஷ் அறிவுரை..!

இந்த முறை பாஜக அதிக தொகுதிகளில் போட்டியிட இருப்பதாகவும் போட்டி பலமாக இருக்கும் எனவும் பி. எல் சந்தோஷ் தெரிவித்தார்.

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பாஜகவின் தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கட்சியின் 2026 சட்டமன்றத் தேர்தல் தயாரிப்புகளில் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமைந்துள்ளது. கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளர் பி.எல். சந்தோஷ் தலைமையில் கமலாலயத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான சுற்றுப்பயணப் பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, தேர்தல் சுற்றுப் பயணத்துக்காக நியமிக்கப்பட்ட 72 தொகுதி பொறுப்பாளர்களும் இதில் பங்கேற்றிருந்தனர்.இந்த ஆலோசனை முக்கியமாக எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்துவது, தொகுதி அளவில் பணிகளை தீவிரப்படுத்துவது, மக்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது போன்றவற்றை மையமாகக் கொண்டே நடைபெற்றது. பி.எல். சந்தோஷ் அவர்கள் கூட்டத்தில் பேசும்போது, தேர்தல் நெருங்கி வருவதால் நிர்வாகிகள் அனைவரும் முழு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும், போட்டி கடுமையாக இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், இம்முறை பாஜக அதிக தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பையும் அவர் தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கட்சியினரிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.கூட்டத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தேசிய செயலாளரும் தமிழக மேலிடப் பொறுப்பாளருமான அரவிந்த் மேனன், மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.

இதையும் படிங்க: வெற்று வாக்குறுதியால் வஞ்சிக்கும் திமுக... ஏமாற்றமே உங்களுக்கு GIFT..! நயினார் கண்டனம்..!

கட்சியின் அணிகள், பரப்புரை உத்திகள், மக்களின் பிரச்சினைகளை எடுத்துரைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டன.இந்தக் கூட்டம் நடைபெற்ற சூழலில், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பொறுப்புகளிலிருந்து விலகியது, ஹெச். ராஜா உடல்நலக் குறைவால் பங்கேற்காதது போன்றவை கட்சியில் சிறு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், கூட்டத்தில் அத்தகைய விவாதங்கள் தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதையும் படிங்க: மீண்டு வாங்க..! தொடர் சிகிச்சையில் எச். ராஜா...! நேரில் சந்தித்து நலம் விசாரித்த தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share