சேப்பாக்கம் மைதானம் வெடித்து சிதறும்... போலீசுக்கு பறந்த மிரட்டல் மெயில்
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. ஆனால், அடங்காமல் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வந்தாலும் அதனை இந்தியா தகர்த்தது. இந்த நிலையில், ஏற்கெனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி நடத்தினால் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது.
பாகிஸ்தான் மின்னஞ்சல் போல் உருவாக்கப்பட்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க இருந்த போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்கப்பட்டன. இந்த நிலையில், இரண்டாவது முறையாக சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மர்ம நபர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்..! மோப்ப நாய் கொண்டு தீவிர சோதனை..!
இதையும் படிங்க: நாட்டின் அசாதாரண சூழல்.. புதுச்சேரி ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!