×
 

தமிழகமே பரபரப்பு...!! - கோவை, சேலம், ஈரோட்டிற்கு குறி... மோப்ப நாயுடன் களமிறங்கிய சிறப்பு போலீஸ் படை...!

ஒரே நாளில் ஈரோடு, சேலம், கோவையில் உள்ள தலைமை தபால் நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஈரோடு காந்திஜி சாலையில் அமைந்துள்ள தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் சேவை, ஆதார் உள்ளிட்ட பல்வேறு சேவை பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக காட்சியளிக்கும். இந்நிலையில் இன்று காலை கோயம்புத்தூரில் உள்ள பாஸ்போர்ட் மண்டல அலுவலகத்திற்கு வந்த மர்ம தொலைபேசி அழைப்பபில்,  ஈரோடு தலைமை அஞ்சல் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அது இன்று நண்பகல் 12.15 மணிக்கு வெடிக்கும் என்று கூறி இணைப்பை மர்ம நபர் துண்டித்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுகுறித்து உடனடியாக ஈரோடு தலைமை தபால் நிலைய அலுவலகத்திற்கும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஈரோடு நகர காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமரன், தலைமையிலான போலீசார், மோப்பநாய் பவானி மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களுடன் ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சல் அலுவலகத்திற்கு உடனடியாக சென்றனர்.

அங்குபாஸ்போர்ட் சேவை,விரைவு பார்சல் சேவை பிரிவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சோதனையை மேற்கொண்டனர். மேலும் மெட்டல் மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு ஒவ்வொரு பிரிவாக சென்று சோதனை நடத்தினர். பாதுகாப்பிற்காக தற்காலிகமாக பாஸ்போர்ட் சேவை நிறுத்தப்பட்டு மக்களை வெளியேற்றினர்.
 சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இந்த சம்பவத்தால் ஈரோடு தலைமை தபால் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும் மிரட்டல் கொடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மோடி துவங்கிவைத்த திட்டம்!! WHO பாராட்டு!! கர்ப்பப்பை புற்று நோய்க்கு இந்தியாவில் இலவச தடுப்பூசி!!

இதேபோல் கோவையில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.  பொள்ளாச்சியில் உள்ள தலைமை தபால் நிலையத்திற்கும், கோவையில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் வந்ததையடுத்து பொள்ளாச்சி தபால் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு, தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டு வருகிறது.மேலும் மோப்பநாய் பைரவா வரவழைக்கப்பட்டு பொள்ளாச்சி தபால் நிலையத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை நடைபெற்ற வருகிறது. கோவை தபால் நிலையத்திற்கு ஒரு பெண்ணின் பெயர் கொண்ட மின்னஞ்சலில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது

ஈரோடு, கோவை தபால் நிலையங்களைத் தொடர்ந்து,  சேலம் தலைமை தபால் நிலையம் மற்றும் அதன் அருகே உள்ள பாஸ்போர்ட் கிளை அலுவலகத்தில்  வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே தலைமை தபால் நிலையம் உள்ளது . இந்த அலுவலகம் அருகே பாஸ்போர்ட் சேவை அலுவலகம் உள்ளது. இந்த இரண்டு அலுவல கத்திற்கும்  இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனையடுத்து தற்போது சேலம் மாநகர காவல் துறையினரும், வெடிகுண்டு நிபுணர்களும் மெட்டல் டிடெக்டர் வைத்து  சோதனை செய்து வருகின்றனர்.
 

இதையும் படிங்க: UAE-ல் தாண்டவமாடும் ஈரான்!! அமீரகத்தில் விழுந்த 708 குண்டுகள்!! இரக்கம் காட்டாமல் ஈரான் தாக்குவதால் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share