×
 

பாரதியார் வரிகளுடன் பாம் மிரட்டல்! கோவை ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வித்தியாச இமெயில்..!

.

இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில், அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பிற பொது இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் பெறப்படுவது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. இந்த மிரட்டல்கள் பெரும்பாலும் மின்னஞ்சல், தொலைபேசி அழைப்புகள் அல்லது சமூக ஊடக தளங்களான எக்ஸ் மூலம் வருகின்றன. இவை பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்துவதோடு, அரசு நிர்வாகத்தின் வளங்களையும் கணிசமாகப் பயன்படுத்துகின்றன.

வெடிகுண்டு மிரட்டல்கள் புரளியாகவே இருந்தாலும், அவை பொதுமக்களிடையே அச்சத்தை உருவாக்குவதற்காகவே விடுக்கப்படுகின்றன. இந்தியாவில், குறிப்பாக சென்னை, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மாநில சட்டமன்றங்கள் மற்றும் மத்திய அரசு கட்டடங்களுக்கு இத்தகைய மிரட்டல்கள் அவ்வப்போது வருகின்றன. இதேபோல், அரசு அலுவலகங்களுக்கும் இத்தகைய மிரட்டல்கள் மின்னஞ்சல் அல்லது அநாமதேய தொலைபேசி அழைப்புகள் மூலம் வருவது வழக்கமாக உள்ளது.

மிரட்டல்கள் புரலியாகவே இருந்தாலும் பாதுகாப்பு கருதி, ஒவ்வொரு மிரட்டலையும் அரசு தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது. இதனால், பாதுகாப்பு சோதனைகள், அவசர மீட்பு நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களை வெளியேற்றுதல் போன்றவை உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பாரதியார் கவிதை வரிகளை மேற்கோள் காட்டி இ-மெயில் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். 

படித்தவன் சூதும் வாதும் செய்தால்.. போவான், போவான்.. ஐயோ என்று போவான் என்ற பாரதியாரின் வரிகளை மேற்கோள் காட்டி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share