அடடே...மும்பையில் ஓர் திருப்பதி... அறங்காவலர்கள் கூட்டத்தில் முக்கிய முடிவு...!
மும்பையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலை அமைக்க அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில், உலகின் மிகப் புகழ்பெற்ற வைணவத் தலங்களில் ஒன்று. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில், திருமலை என்னும் ஏழு மலைகளின் ஏழாவது சிகரமான வெங்கடாத்ரியில் அமைந்துள்ள இக்கோவில், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி என்னும் விஷ்ணு அவதாரத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது. கலியுகத்தில் மனிதகுலத்தை காப்பாற்ற விஷ்ணு இங்கு தோன்றியதாக ஐதீகம். இதனால் இத்தலம் "கலியுக வைகுண்டம்" என்றும், இறைவன் "கலியுக ப்ரத்யக்ஷ தெய்வம்" என்றும் போற்றப்படுகிறது.
ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்யும் இக்கோவில், உலகின் செல்வந்தமான கோவில்களில் ஒன்று. திராவிடக் கட்டிடக்கலைக்கு சிறந்த உதாரணமான இக்கோவில், அனந்த நிலயம் என்னும் விமானத்தின் கீழ் அமைந்துள்ளது. தங்க முலாம் பூசப்பட்ட கோபுரம், உயரமான துவாரங்கள், சிற்பங்கள் நிறைந்த மண்டபங்கள் ஆகியவை கம்பீரத்தை ஏற்படுத்துகின்றன. திருப்பதி ஏழுமலையான் தரிசனம், பக்தர்களுக்கு ஆன்மிக அமைதியையும், வாழ்வில் வெற்றியையும் அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீ வெங்கடேஸ்வரரின் ஆலயங்களை அமைத்து, பக்தர்களுக்கு வசதியாக தரிசனம் செய்யும் வாய்ப்பை ஏற்படுத்துவதே திருப்பதி தேவஸ்தானத்தின் நோக்கமாக உள்ளது. குறிப்பாக, மஹாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை பகுதி பக்தர்கள் அதிகம் கொண்டிருப்பதால், இங்கு கோயில் அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: #BREAKING: பேரதிர்ச்சி... பழம்பெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானார்...! சோகத்தில் திரையுலகம்...!
இந்த நிலையில் மும்பையில் திருப்பதி கோவிலை அமைக்க ஏழுமலையான் கோவில் அறங்காவலர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ராவில் ரூ.14.40 கோடி செலவில் பெருமாள் கோயில் கட்ட திருப்பதி ஏழுமலையான் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி அலிபிரியில் பக்தர்கள் வசதிக்காக பொழுதுபோக்கு அம்சங்களுடன் ஒருங்கிணைந்த டவுன்ஷிப் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கு? தேர்தல் பணி தரமா இருக்கணும்... திமுக நிர்வாகிகளுடன் முதல்வர் ஒன் டூ ஒன் ஆலோசனை...!