×
 

சென்னை மக்களே கவனிங்க… ஆயிரம் அரங்குகளுடன் ஜன.8 முதல் புத்தக கண்காட்சி தொடக்கம்…!

ஜனவரி எட்டாம் தேதி முதல் சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் புத்தகப் பிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஒரு மாபெரும் திருவிழாவாக விளங்கும் சென்னை புத்தகக் கண்காட்சி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கமான பபாசி ஏற்பாட்டில் நடைபெறுகிறது. இது இந்தியாவிலேயே கொல்கத்தா புத்தகக் கண்காட்சிக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியாகக் கருதப்படுகிறது. 1977-ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி, சென்னையின் கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றாக, இசைக்காலத்துடன் சேர்ந்து முக்கிய இடம் பிடித்துள்ளது

.2024-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி 2025-ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற 48-வது சென்னை புத்தகக் கண்காட்சி, டிசம்பர் 27-ஆம் தேதி முதல் ஜனவரி 12-ஆம் தேதி வரை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது. பொங்கல் பண்டிகையின் போது பலர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் கூட்டம் குறையலாம் என்கிற காரணத்தால் இம்முறை கண்காட்சி முன்கூட்டியே தொடங்கப்பட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இதனைத் தொடங்கி வைத்தனர்.

இந்தக் கண்காட்சியில் சுமார் 900 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. லட்சக்கணக்கான புத்தகங்கள், குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு வகைகளான நாவல்கள், குழந்தைகள் புத்தகங்கள், அரசியல், வரலாறு, ஆன்மிகம், சுயமுன்னேற்றம், கல்வி போட்டித் தேர்வு வழிகாட்டிகள் உள்ளிட்டவை இடம்பெற்றன. 

இதையும் படிங்க: களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்... நெல்லைக்குப் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின்...!

இதனிடையே 2026 ஜனவரி 8 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையில் புத்தக கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 49 ஆவது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. ஜனவரி 8ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் புத்தக கண்காட்சி தொடங்கி வைக்க உள்ளார். புத்தக கண்காட்சி தினசரி காலை 11 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் என்றும் மொத்தம் ஆயிரம் அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: ஒட்டுமொத்த திமுகவுக்கும் நேரம் நெருங்கிடுச்சு... அதிமுக கடும் விமர்சனம்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share