×
 

பெருஞ்சோகம்: வீடு கழுவி விடும் போது விபரீதம்... மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலி...!

அம்பாசமுத்திரம் அருகே மின்சாரம் தாக்கி 3 வயது சிறுவன் பலியான சோகம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகேயுள்ள விக்கிரமசிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் முருகன் (40).  இவர் இப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜானகி.
இந்த தம்பதிக்கு சாய் ஶ்ரீனிவாசன் (6), கிருஷ்ணன் (3) என இரண்டு மகன்கள் இருந்தனர்.

இந்நிலையில் இன்று ஜானகி வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொண்டிருந்தார். அப்போது டிவிக்கு செல்லும் மின்கம்பி தரையில் விழுந்தால் அதன் வழியாக தண்ணீரில் மின்சாரம் பாய்ந்ததாக கூறப்படுகிறது.

இதில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கிருஷ்ணன் தூக்கி எறியப்பட்டதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மகனை காப்பாற்ற முயன்ற ஜானகியும் மின்சாரம் தாக்கியத்தில் கையில் காயம் அடைந்த  நிலையில் அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதையும் படிங்க: நில அபகரிப்பு வழக்கு! மே 11-ல் ஆஜராக எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நீதிமன்றம் சம்மன்!

மேலும் இந்த மின்சார விபத்தில் பலியான சிறுவனின் உடலை கைபற்றிய பிரேத பரிசோதனை செய்ய அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: #ViralVideo பூஸ்ட் இஸ் த சீக்ரெட் ஆஃப் தவெக எனர்ஜி... அருண்ராஜ் பட ஸ்டிக்கருடன் தாறுமாறு வைரலாகும் பூஸ்ட் டப்பாக்கள்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share