×
 

இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்னைக்கு ஒரே வழிதான்! கட் அண்ட் ரைட் ! ஐ.நா சொல்லும் தீர்வு!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையிலான பல ஆண்டு கால மோதலை தீர்ப்பதற்கு ஒரே வழி இரு நாடுகள் தான் தீர்வு மட்டுமே சாத்தியமாக இருக்கும் என ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்தார்.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நீண்டகால போர் நீடிக்கும் நிலையில், காசா பிரச்னைக்கு தீர்வாக 'இரு நாடுகள் தீர்வு' (Two-State Solution)க்கு வலியுறுத்தி, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. இது, போரை முடிவுக்குக் கொண்டுவரும் முக்கிய அடியாக எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதை "பயங்கரவாதத்துக்கு வெகுமதி" என்று விமர்சித்து, கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் ஆகியோர் இந்த அங்கீகாரத்தை ஆதரித்துள்ளனர்.

செப். 21 அன்று, கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் ஆகிய நாடுகள் ஒரே நேரத்தில் பாலஸ்தீனத்தை அங்கீகரித்தன. பிரான்ஸ், ஐ.நா. பொது சபை கூட்டத்தில் (செப். 22) இதை உறுதிப்படுத்தியது. இந்த முடிவு, காசா போரில் 65,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்ததும், பசி நெருக்கடி, அழிவு ஏற்பட்டதும் போன்ற பாதிப்புகளுக்குப் பின் வந்துள்ளது. 

இதையும் படிங்க: ஆஸி, கனடா, பிரிட்டன் நாடுகளுக்கு வார்னிங்! பாலஸ்தீனம் இருக்காது பார்த்துக்கோங்க!! கொந்தளிக்கும் நெதன்யாகு!

கனடா பிரதமர் மார்க் கார்னி, "இது அமைதியான எதிர்காலத்தின் வாக்குறுதி" என்று கூறினார். ஆஸ்திரேலியா பிரதமர் ஆந்தனி ஆல்பனீஸ், "இரு நாடுகள் தீர்வுதான் நிலையான அமைதிக்கு வழி" என்றார். பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், "காசாவின் பாதிப்புகள் தாங்க முடியாதவை" என்று விமர்சித்தார்.

இந்த அங்கீகாரம், ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 140க்கும் மேற்பட்டவை (இந்தியா உட்பட) ஏற்கனவே செய்துள்ளதை வலுப்படுத்துகிறது. ஆனால், அமெரிக்கா, இஸ்ரேல், அவற்றின் நட்பு நாடுகள் உட்பட 45 நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை.

பெரும்பாலான அங்கீகார நாடுகள், "ஹமாஸ் கட்டுப்பாட்டில் பாலஸ்தீனம் இருக்கக் கூடாது" என்ற நிபந்தனையுடன் இதைச் செய்துள்ளன. ஹமாஸ் இதை "அரசியல் உரிமைக்கு தடை" என்று நிராகரித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த அங்கீகாரத்தை "ஹமாஸின் பயங்கரவாதத்துக்கு வெகுமதி" என்று கண்டித்தார். "பாலஸ்தீன நாடு இருக்காது. எங்கள் நிலத்தின் மையத்தில் பயங்கரவாத அரசை திணிக்க முயற்சிக்கிறார்கள்.

இதற்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார். இஸ்ரேல், வெஸ்ட் பேங்க் பகுதியில் குடியேற்றங்களை விரிவாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது, இது சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும்.

ஐ.நா. தலைமையகத்தில் பேசிய பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், "பாலஸ்தீனத்துக்கு அரசு அந்தஸ்து ஒரு உரிமை, வெகுமதி அல்ல. அதை மறுப்பது பயங்கரவாதிகளுக்கு பரிசு. இரு நாடுகள் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி இருக்காது" என்று வலியுறுத்தினார். ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், "இஸ்ரேல்-பாலஸ்தீன சவால்களுக்கு இரு நாடுகள் தீர்வுதான் பொதுச் சபைக்கு முக்கியம்" என்று கூறினார்.

நிபுணர்கள், "அங்கீகாரம் அரசியல் மற்றும் சட்ட உரிமைக்கு தடையாக இருக்கலாம். இது ஒரு குறிப்பிட்ட பகுதியை தனி நாடாக மாற்றாது; எல்லைகள், தலைநகர், ராணுவம் போன்றவை இன்னும் தீர்மானிக்கப்படவில்லை" என்று கூறுகின்றனர்.

இந்த அங்கீகாரம், போரை உடனடியாக நிறுத்தாது என்றாலும், சர்வதேச அழுத்தத்தை அதிகரிக்கும். இந்த அறிவிப்புகள், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தின் ஓரங்களில் விவாதிக்கப்படும். இது, மத்திய கிழக்க அமைதிக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தலாம்.

இதையும் படிங்க: வாங்க! காசா பிரச்னையை தீர்ப்போம்! இஸ்லாமிய தலைவர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு! விரைவில் மீட்டிங்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share