திருவாரூரில் சாலை விபத்து.. 4 பேர் பரிதாப உயிரிழப்பு.. போலீஸ் தொடர் விசாரணை..!
திருத்துறைப்பூண்டி அருகே அரசு பேருந்தும் வேனும் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. நாகப்பட்டினத்தில் இருந்து ஏர்வாடி சென்ற இந்த பேருந்தும் வேளாங்கண்ணி சென்ற ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்து மாத்திரையில் ஸ்டேப்ளர் பின்.. முதல்வர் தனி பிரிவுக்கு பாய்ந்த புகார்..!
இதையும் படிங்க: நாளை மறுநாள் நடைபெறவிருந்த ஆண்டுத் தேர்வு ஒத்திவைப்பு... காரணம் இது தான்..!